கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க விமான நிலையம், ரயில் நிலையங்களில் தீவிர கண்காணிப்பு பணிகள், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதன் ஒரு பகுதியாக, காரைக்கால் திருநள்ளாறு சனீஸ்வரன் கோயிலில் உள்ள நாள தீர்த்தத்தில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதைத்தொடர்ந்து, புதுச்சேரியில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், தன்னாட்சி அமைப்புகளில் பையோ-மெட்ரிக் வருகைப் பதிவேட்டை இடைக்காலமாக நிறுத்திவைக்க, புதுச்சேரி தலைமைச் செயலகம் உத்தரவிட்டுள்ளது. மேலும் மறு அறிவிப்பு வரும் வரை இந்த உத்தரவு நீடிக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கொரோனா பரவுவதைத் தடுக்க சனீஸ்வரன் கோயில் குளத்தில் குளிக்கத் தடை!