ரஷ்யா தலைநகர் மாஸ்கோவில் நடைபெறும் ஷாங்காய் கூட்டறவு நாடுகளின் முக்கிய கூட்டத்தில் பங்கேற்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கடந்த செப். 8ஆம் தேதி ரஷ்யா புறப்பட்டார்.
ரஷ்யாவிற்கு செல்லும் வழியில் திடீர் பயணமாக ஈரானில் தரையிறங்கிய ஜெய்சங்கர், அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜாவேத் ஜாரிப்பை சந்தித்தார்.
முன்னதாக, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஈரான் சென்று அந்நாட்டு அரசு பிரதிநிகளுடன் ஆலோசனை நடத்தினார். இரு முக்கிய அமைச்சர்கள் ஈரான் நாட்டுக்கு மேற்கொண்டது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
அமைச்சர் ஜெய்சங்கரின் பயணம் குறித்து வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவத்சவா வெளியிட்டுள்ள அறிக்கையில், இரு நாட்டு பிராந்திய உறவு குறித்து முக்கிய அம்சங்கள் இந்த பயணத்தில் விவாதிக்கப்பட்டது.
குறிப்பாக சாபர் துறைமுக ஒப்பந்தம் குறித்து, அங்கு சரக்கு போக்குவரத்து செயல்பாட்டை அதிகரிப்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது. இரு நாட்டு தலைவர்களின் சந்திப்பு சிறப்பானதாக அமைந்தது எனக் கூறினார்.
இதையும் படிங்க: இந்தியா-சீனா எல்லை நிலவரம் குறித்து விளக்கம் கேட்கும் சரத் பவார்