ETV Bharat / bharat

பிகார் வெள்ளம்; தர்பங்கா மாவட்டம் கடும் பாதிப்பு, உயிரிழப்பு 25ஆக உயர்வு!

பிகார் மாநிலத்தில் மழை வெள்ளத்தினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை வியாழக்கிழமை (ஆக.13) 25 ஆக உயர்ந்தது.

Bihar floods Death toll mounts to 25 in Bihar 77.77 lakh people affected in Bihar 16 districts affected by flood பிகார் வெள்ளம் உயிரிழப்பு 16 மாவட்டங்கள் பாதிப்பு

author img

By

Published : Aug 14, 2020, 8:57 AM IST

பாட்னா: நேபாளத்தில் உற்பத்தியாகி பிகார் பகுதிகளில் ஓடும் நதிகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு, கனமழை காரணமான ஏற்பட்ட வெள்ளம் உள்ளிட்ட இயற்கை இடர்பாடுகளால் பிகார் மாநிலத்தில் 16 மாவட்டங்களை சேர்ந்த 78 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், மாநிலத்தில் உயிரிழப்பு 25 ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்ச உயிரிழப்பு பதிவாகியுள்ள தர்பங்கா மாவட்டத்தில் மட்டும் 20 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதேபோல் முசாபர்பூர் பகுதியில் ஆறு பேரும், மேற்கு சம்பரான் பகுதியில் நான்கு பேரும், சரண் மற்றும் சிவான் ஆகிய மாவட்டங்களில் தலா இருவரும் உயிரிழந்திருந்தனர்.

பிகார் வெள்ளம்; தர்பங்கா மாவட்டம் கடும் பாதிப்பு!

மாநிலத்தில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுவருகின்றனர்.

இது குறித்து தேசிய பேரிடர் மீட்புக் குழுவின் 9ஆவது பட்டாலியன் கமாண்டர் விஜய் சின்ஹா கூறுகையில், “வெள்ளம் பாதித்த 14 மாவட்டங்களில் 23 குழுவினர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுவருகின்றனர்” என்றார்.

இதையும் படிங்க: பிகார் வெள்ளம்: 69 லட்சம் மக்கள் பாதிப்பு, 21 பேர் உயிரிழப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.