டெல்லியில் ஈடிவி பாரத்துக்கு, ஒருங்கிணைந்த ஜனதா தளம் கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் கே.சி. தியாகி அளித்த பிரத்யேக பேட்டியில் கூறியதாவது:-
பிகாரில் மகா கூட்டணி இடையே பிளவு ஏற்பட்டுள்ளது. ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆர்.ஜே.டி.) முதலமைச்சர் வேட்பாளராக தேஜஸ்வி யாதவ்வை அறிவித்துள்ளனர். இது கூட்டணியிலுள்ள மற்ற கட்சியினர் இடையே இடைவெளியை ஏற்படுத்தி உள்ளது. இதுமட்டுமின்றி ஆர்ஜேடி., கட்சி, குடும்பத்துக்குள்ளும் ஒரு இடைவெளி உள்ளது.
ஆகையால் தற்போது அந்தக் கூட்டணி சிதைந்துவருகிறது. பிகாரை பொறுத்தமட்டில், தேசிய ஜனநாயகக் கூட்டணி முதலமைச்சர் நிதிஷ் குமாருக்கு எதிராக வலுவான தலைவர்கள் யாரும் இல்லை. ஆர்.ஜே.டி. நிறுவனர் லாலு பிரசாத் நடத்தும் போராட்டங்களின் நோக்கம் அதிகாரத்தை கைப்பற்றுவதை மட்டுமே நோக்கமாக கொண்டிருக்கும்.
மக்கள் நலனில் அக்கறை இருக்காது. வருகின்ற சட்டப்பேரவை தேர்தலிலும் 220 தொகுதிகளில் மீண்டும் வெற்றிப் பெறுவோம்” என்றார்.
பிகாரில் இந்தாண்டு இறுதியில் சட்டப்பேரவை தேர்தல் நடக்கிறது. ஆர்.ஜே.டி. அமைத்துள்ள மகா கூட்டணியில் காங்கிரஸ், ஹிந்துஸ்தானி ஆவா மோர்சா, ராஷ்ட்ரீய லோக் சமதா கட்சி, விகாஷ் இன்சான் கட்சி, லோக்தன்டிரிக் ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன.