ETV Bharat / bharat

பிகார் சட்டப்பேரவை தேர்தல் 2020; எதிர்க்கட்சிகளின் முதலமைச்சர் வேட்பாளர் தேஜஸ்வி யாதவ்! - முதலமைச்சர் வேட்பாளர் தேஜஸ்வி யாதவ்

பிகார் சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரசுக்கு 70 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில், கூட்டணி தலைவர்கள் தனது தலைமை மீது நம்பிக்கை கொண்டுள்ளனர் என தேஜஸ்வி யாதவ் கூறியுள்ளார்.

Bihar assembly election 2020 Tejashwi yadav alliance partners have shown faith in my leadership RJD பிகார் சட்டப்பேரவை தேர்தல் 2020 முதலமைச்சர் வேட்பாளர் தேஜஸ்வி யாதவ் ஆர்.ஜே.டி.

author img

By

Published : Oct 3, 2020, 10:57 PM IST

பாட்னா: ராஷ்ட்ரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி) தலைவர் தேஜஷ்வி யாதவ் பிகார் சட்டப்பேரவை தேர்தல் 2020 இல் எதிர்க்கட்சி கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளராக இருப்பார் என்று காங்கிரஸ் சனிக்கிழமை (அக்.3) ஒரு கூட்டு செய்தியாளர் கூட்டத்தில் அறிவித்துள்ளது.

"ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் (யுபிஏ) அனைத்து கட்சிகளும் பிகார் சட்டப்பேரவை தேர்தலுக்கான கூட்டணியாக ஒன்றிணைய முடிவு செய்துள்ளன. இந்த மகா கூட்டணியில் காங்கிரஸ், ஆர்ஜேடி, சிபிஐ, சிபிஎம் மற்றும் விகாஷீல் இன்சான் கட்சி ஆகியவை உள்ளன.

தற்போது கூட்டணி கட்சிகளுக்கு இடையே தொகுதி பங்கீடு இறுதியாகியுள்ளது. அதன்படி, எதிர்க்கட்சியான ஆர்ஜேடி 144 இடங்களில் போட்டியிடும், அதே நேரத்தில் காங்கிரஸ் 70 இடங்களில் போட்டியிடும். இடதுசாரிக் கட்சிகள் 29 இடங்களில் போட்டியிடுகின்றன.

பிகாரில் இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட தேர்தல் நவம்பர் 3 மற்றும் 7 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளன. முன்னதாக காங்கிரஸ் கட்சிக்கு 60 தொகுதிகளுக்கு மேல் வழங்க லாலு பிரசாத் யாதவ்வுக்கு விருப்பம் இல்லை என்று செய்திகள் வெளியாகி இருந்தன.

தற்போது காங்கிரஸிற்கு 70 இடங்கள் வழங்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக ட்விட்டரில், “எல்லாம் நன்மைக்கே” என்று காங்கிரஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆளும் கட்சியான பாஜக, ஒருங்கிணைந்த ஜனதா தளம் தரப்பில் இதுவரை தொகுதி இறுதி செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: மாயாவதிக்கு டாட்டா காட்டிய மாநிலத் தலைவர்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.