கரோனா தொற்றிலிருந்து மீண்டு வந்த பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன், சில வாரம் ஓய்வுக்கு பிறகு மீண்டும் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நடிக்க தொடங்கியுள்ளார்.
இந்நிலையில், கரோனா தொற்றால் பண்டிகைகள் கொண்டாடும் விதத்தை மக்கள் மாற்றியிருக்கலாம். ஆனால், விழாவை கொண்டாட வேண்டும் என்ற மக்களின் மனநிலை ஒருபோதும் மாறவில்லை என பாலிவுட் மெகாஸ்டார் அமிதாப்பச்சன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியாகியுள்ள அறிக்கையில், "பண்டிகை காலங்களான நவராத்திரி, துர்கா பூஜை தற்போது வந்துவிட்டது. விரைவில் தீபாவளி, தசரா பண்டிகைகள் வரவுள்ளன.
இந்தப் பண்டிகைகள் கொண்டாடுவதற்கான வரம்புகளும், கட்டுபாடுகளும் மாறியுள்ளன. ஆனால், மக்களின் பிராத்தனையோ வழிபாடும் குறையவில்லை. பண்டிகையை கொண்டாட வேண்டும் என்பதில் உறுதியுடனும், பக்தியிடனும் உள்ளனர்.
இந்தத் தருணங்கள் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தும். நண்பர்கள், உறவினர்களுடன் அதிக நேரத்தில் செலவழித்தோம். இந்த நியாயங்களுடன் இந்தாண்டின் பண்டிகை காலத்தை பாதுகாப்புடனும் கரோனா விதிமுறைகள பின்பற்றி கொண்டாடுவோம்" எனப் பதிவிட்டிருந்தார்.