உத்தரப் பிரதேச மாநிலம், வாரணாசியில் இருந்து சுமார் 13 கிலோ மீட்டர் தொலைவில் 'பபானியாவ்' என்ற கிராமத்தில் பனாரஸ் இந்துப் பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத்துறை ஆசிரியர்களும், மாணவர்களும் தொல்பொருள் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த முதற்கட்ட ஆராய்ச்சியில் நான்கு ஆயிரம் ஆண்டுகள் பழமையான கிராமம் ஒன்றை கண்டுபிடித்துள்ளனர்.
இதுதொடர்பாக ஆய்வில் ஈடுபட்ட வரலாற்றுப் பேராசிரியர் ஏ.கே.தூபே கூறுகையில், "வாரணாசி மாவட்டத்தில் உள்ள பபானியாவ் என்ற கிராமத்தில் கோயில் ஒன்றை கண்டுபிடித்துள்ளோம். இது கி.பி. 5 மற்றும் 8ஆம் நூற்றாண்டுகளில் கட்டப்பட்டிருக்க வேண்டும்.
இதுபோல, 4000ஆம் ஆண்டுகள் பழமை வாய்ந்த மண் பானைகளையும், இரண்டு ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த சுவர்களையும் கண்டுபிடித்துள்ளோம். இதையெல்லாம் வைத்துப் பார்க்கும் போது சுமார் 3500 - 4000 ஆண்டுகளுக்கு முன்னர் இங்கு ஒரு கிராமம் இருந்திருக்கும். வாரணாசிக்கு அடுத்தபடியாக சிறிய வர்த்தக மையமாக இக்கிராமம் திகழ்ந்திருக்கக்கூடும்" என்றார்.
"ஆய்வின் முடிந்த பின்னர் முழு விவரம் தெரியவரும்" எனவும் இந்திய தொல்லியல் துறையின் முன்னாள் கூடுதல் இயக்குநர் பி.ஆர்.மணி தெரிவித்தார்.
இதையும் படிங்க : கொரோனா பீதி: இத்தாலியில் உலகப் புகழ்பெற்ற திருவிழா ரத்து!