ETV Bharat / bharat

'பொய் முகத்தைக் கலைத்துவிட்டு தேர்தல் களம் காணுங்கள்' - மோகன் பகவத்துக்கு சவால்!

author img

By

Published : Feb 23, 2020, 4:05 PM IST

Updated : Feb 23, 2020, 4:18 PM IST

டெல்லி : தேர்தலில் போட்டியிடுமாறு ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்துக்கு பீம் ஆர்மி இயக்கத் தலைவர் சந்திர சேகர் ஆசாத் சவால்விடுத்துள்ளார்.

Chandrashekhar Azad Dares RSS Chief
Chandrashekhar Azad Dares RSS Chief

மகாராஷ்டிரா மாநிலம், நாக்பூரில் பீம் ஆர்மி தொண்டர்களிடையே உரையாற்றிய அந்த இயக்கத் தலைவர் சந்திரசேகர் ஆசாத், "ஆர்எஸ்எஸ் தலைவருக்கு ஒன்று சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். பொய் முகத்தைக் கலைத்துவிட்டு களத்துக்கு வாருங்கள். இதுதான் ஜனநாயகம்.

உங்கள் அஜென்டாவை முன்னிறுத்தி தேர்தலில் போட்டியிடுங்கள். பிறகு அரசியலைப்புச் சட்டம், மனுதர்மம் எது நாட்டை ஆள வேண்டும் என மக்கள் தீர்ப்பளிப்பார்கள்.

நாம் அரசியலைப்புச் சட்டத்தின் மீது நம்பிக்கை வைத்துள்ளோம். அவர்கள் மனுதர்மத்தின் மீது வைத்திருக்கிறார்கள். சித்தாந்தங்கள் அல்ல; அரசியலமைப்பே நாட்டை வழிநடத்துகிறது. ஆர்எஸ்எஸ் அமைப்புக்குத் தடைவிதித்தால் மட்டுமே மனுதர்மம் ஒழிந்துபோகும்.

நம் மக்கள் அரசுப் பணி கிடைக்கவே திண்டாடுகிறார்கள். ஒருநாள் நமக்கென ஒரு பிரதமர் வருவார். அப்போது உங்களுக்கு இடஒதுக்கீடு கொடுக்கப்படும். என்பிஆரை செயல்படுத்த மகாராஷ்டிர அரசு அனுமதிக்கக் கூடாது" என்றார்.

இதையும் படிங்க : தங்கத் தட்டில் உணவருந்துகிறாரா ட்ரம்ப்?

Last Updated : Feb 23, 2020, 4:18 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.