ETV Bharat / bharat

'பிஎஸ்.என்.எல் விருப்ப ஓய்வு' திட்டத்துக்கு எதிராக ஊழியர் சங்கம் நாடு தழுவிய போராட்டம் - BSNL central government new scheme

டெல்லி: மத்திய அரசு அன்மையில் கொண்டுவந்த விருப்ப ஒய்வு திட்டத்துக்கு எதிராக பி.எஸ்.என்.எல் ஊழியர் சங்கத்தினர் நாடு தழுவிய போராட்டம் நடத்திவருகின்றனர்.

BSNL
author img

By

Published : Nov 25, 2019, 5:01 PM IST

அரசின் பொதுத்துறை தொலைத்தொடர்பு சேவை நிறுவனமான பி.எஸ்.என்.எல் நிறுவனம் விருப்ப ஓய்வு திட்டம் ஒன்றை அமல்படுத்தியுள்ளது.அதன்படி நீண்ட காலம் பணியில் இருக்கும் ஊழியர்கள் தாமாக முன்வந்து விருப்ப ஓய்வெடுக்கும் பட்சத்தில் சிறப்பான சலுகைகளுடன் கூடிய பணிக்கொடை அளிப்பதாகத் தெரிவித்தனர். இதையடுத்து இந்த திட்டத்துக்குத் தகுதியாக உள்ள சுமார் ஒன்றரை லட்சம் ஊழியர்களில் சுமார் 77 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.

இதனிடையே மத்திய அரசு கொண்டுவந்த இத்திட்டத்திற்கு எதிராக நாடு தழுவிய போராட்டத்தை பி.எஸ்.என்.எல் ஊழியர் சங்கம் இன்று நடத்திவருகிறது. விருப்ப ஓய்வை நோக்கி ஊழியர்களைத் தள்ளுவது தவறான அணுகுமுறை என்றும், விருப்ப ஓய்வுக்குப் பல ஊழியர்களை நிர்வாகம் கட்டாயப்படுத்துவதாகக் குற்றம்சாட்டி இந்தப் போராட்டத்தை நடத்திவருகிறது ஊழியர் சங்கம்.

விருப்ப ஓய்வு திட்டத்தின் மூலம் தன்னுடைய சம்பள செலவில் 7 ஆயிரம் கோடி ரூபாய் மிச்சப்படுத்த பி.எஸ்.என்.எல் திட்டமிட்டுள்ளது.

இதையும் படிங்க: காவல் படையில் சேர்ந்த 6 நாய்கள் - குளோனிங் முறையில் தயாரித்து அசத்திய சீனர்கள்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.