புனே: சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே விவசாயிகளுக்கு ஒருநாள் உண்ணாவிரதம் இருந்துவருகிறார்.
வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக்கோரி பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான் மாநில விவசாயிகள் கடந்த 10 நாள்களுக்கும் மேலாக போராட்டம் நடத்திவருகின்றனர்.
இதற்கு ஆதரவு தெரிவித்த அன்னா ஹசாரே, "கடந்த பத்து நாள்களாக விவசாயிகள் நடத்திவரும் போராட்டத்தில் எந்தவித வன்முறையும் வெடிக்கவில்லை. அமைதியான முறையில்தான் போராடிவருகின்றனர்.
டெல்லியில் நடந்துவரும் போராட்டம் நாடு முழுவதும் பரவ வேண்டும் என்று நான் நாட்டு மக்களிடம் வேண்டுகோள்விடுக்கின்றேன்.
விவசாயிகள் வீதிகளில் வந்து தங்கள் பிரச்சினைகளைத் தீர்க்க இது சரியான நேரம். இதனை நான் முன்பே ஆதரித்தேன், தொடர்ந்து செய்வேன்" என்று அவர் கூறியுள்ளார்.
2011ஆம் ஆண்டு லோக்பால் சட்டத்தை இயற்றக்கோரி டெல்லி ராம்லீலா மைதானத்தில் அன்னா ஹசாரே உண்ணாவிரதம் இருந்தார் என்பது நினைவுகூரத்தக்கது.
இதையும் படிங்க: டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு வீட்டுக்காவல்!