ETV Bharat / bharat

விதைகளுக்கான தடை நீங்கினால் இந்தியா-பாகிஸ்தான் உறவு வலுப்படும்! - விதைகளுக்கான வர்த்தகம்

போரில் ஈடுபடுவதைக் காட்டிலும் வர்த்தகத்திலும் சமாதானத்திலும் ஈடுபடுவது எளிது என யோசனை தெரிவிக்கும் இந்திய தேசிய விதைகள் சங்கத்திற்கான எல்லை மற்றும் கொள்கை திட்டமிடல் இயக்குநர் இந்திர சேகர் சிங், 'இந்தியா- பாகிஸ்தான் நாடுகள் விதைகளை அத்தியாவசியத் தேவையாகக் கருத்தில்கொண்டு விதை உற்பத்தி, ஏற்றுமதியை ஊக்கவிக்க வேண்டும்' என அறிவுறுத்துகிறார். இது தொடர்பாக அவர் எழுதிய கட்டுரையின் நீட்சி...

Ind-Pak
Ind-Pak
author img

By

Published : Jan 12, 2020, 12:29 PM IST

இருநாடுகளிலும் ஒரேமாதிரி காலநிலை

இந்தியா-பாகிஸ்தான் நாடுகளுக்கிடையே வர்த்தக உறவு ரத்துசெய்யப்பட்டிருப்பது இந்தியாவின் விதை ஏற்றுமதியை பெரிதும் பாதிப்புக்குள்ளாக்கியுள்ளது. இரு நாடுகளுக்கிடையே நிலவும் அரசியல் சூழ்நிலையே இதற்குக் காரணம். ஆனால், இந்தப் புத்தாண்டில் அரசியலிலிருந்து பொருளாதாரத்தைப் பிரித்துப் பார்ப்பது இருநாட்டு விவசாயிகளின் பொருளாதாரநிலை மேம்பட வழிவகுக்கும்.

குஜராத்திகள் வர்த்தகம்புரிவதில் பெயர்போனவர்கள். பிரதமர் மோடியும்கூட குஜராத் மண்ணைச் சேர்ந்தவர்தான். அம்மாநில மண்ணின் மைந்தரான மோடி, தடை காரணமாக இந்திய விவசாயிகள் பாதிக்கப்படுவதைப் புரிந்துகொள்வார் என்று நினைக்கிறேன். உலகிலேயே இந்தியாதான் பாகிஸ்தானுக்கு பழங்கள், காய்கறிகளின் விதைகளை அதிகளவில் ஏற்றுமதி செய்கிறது.

உலகளவில் இந்தியாவிலிருந்து அதிகளவில் விதைகளை இறக்குமதி செய்யும் மூன்றாவது நாடு பாகிஸ்தான். 2018-19 காலகட்டத்தில் இந்தியாவிலிருந்து பாகிஸ்தானுக்கு ஒரு கோடியே 75 லட்சத்து 28 ஆயிரத்து 530 அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான விதைகள் ஏற்றுமதி செய்யப்பட்டன. முன்னதாக 2017-18 காலகட்டத்தில் ஒரு கோடியே 41 லட்சத்து 60 ஆயிரத்து 248 அமெரிக்க டாலர்கள் மதிப்பில் பாகிஸ்தான் நம்மிடமிருந்து விதை இறக்குமதி செய்திருந்தது.

கடந்த ஆண்டைவிட இது மூன்று மில்லியன் அமெரிக்க டாலர்கள் அதிகமாகும். பாகிஸ்தானும் இந்தியாவும் ஒரே காலநிலைகொண்ட நாடுகள். விவசாய முறையும் இரு நாடுகளுக்கிடையே ஒரே முறையிலேயே மேற்கொள்ளப்படுகிறது. இரு நாடுகளிலும் உணவு உண்ணும் பழக்கம், சமையல் செய்யும் முறை, இந்திய விதைகளின் தரம் போன்ற காரணிகளால் பாகிஸ்தான் இந்தியாவிலிருந்து அதிகளவில் விதைகளை இறக்குமதி செய்கிறது. காய்கறிகள், விதைகள் ஏற்றுமதியால் இந்தியா அடைவது ஆதாயங்கள் மட்டுமே.

பருத்தி போன்ற விதைகளின் நிலையென்ன?

வட இந்தியாவிலிருந்து கோதுமை, நெல், பருப்பு, பருத்தி விதைகள் ஆகியவை பாகிஸ்தானுக்கு அனுப்பப்படுகின்றன. பாகிஸ்தானில் இந்திய விதைகள் அமோக விளைச்சல் காண்கின்றன. இதற்கு முக்கியக் காரணிகளாகத் திகழ்வது...

  • இந்தியா, பாகிஸ்தானில் ஒரேவிதமான பருவமுறையில் விளைச்சல் மேற்கொள்வது,
  • இந்திய மண்ணுடன் பாகிஸ்தான் மண் ஒத்துப்போவது,
  • ஒரே நேரத்தில் பருவமழை பெய்வது போன்றவைகளே.

ஒவ்வொரு ஆண்டும் இந்தியா- பாகிஸ்தான் நாடுகளுக்கிடையே ரூ.1300 கோடிமுதல் ரூ. 1,500 கோடிவரை விதை வர்த்தகம் நடைபெறுகிறது. வரும் ஆண்டுகளில் இந்த வர்த்தகம் இரண்டாயிரம் கோடி ரூபாயை எட்டும் என்று கணிக்கப்பட்டுள்ளது. விவசாயிகள், விதை உற்பத்தியாளர்களுக்கு இந்தத் தொகை நேரடியாக கிடைக்கும்பட்சத்தில், எல்லைகளைக் கடந்து இருநாட்டு விவசாயிகள் செழிப்படைவார்கள்.

இந்தியா விழித்துக்கொள்ள வேண்டும்

இதனால், இந்தியா-பாகிஸ்தான் நாடுகளுக்கிடையே உறவு வலுப்படும். விதை ஏற்றுமதிக்கு தடைவிதிப்பது நம்மை நாமே காலில் சுட்டுக் கொல்வதற்குச் சமம். ஏற்றுமதி ரத்துசெய்யப்படும்-பட்சத்தில், இந்தியா அதனால் கிடைக்கும் லாபத்தை இழப்பதோடு, பாகிஸ்தானில் விதைகளுக்குத் தட்டுப்பாடும் ஏற்படும். இருநாட்டு வர்த்தகத்திற்கிடையே பெரும் இடைவெளி விழ இது காரணமாக அமையும்.

இந்த வெற்றிடத்தை பயன்படுத்தி சீன நாட்டு விதை உற்பத்தியாளர்கள் பாகிஸ்தானில் கால் பதிக்கலாம். இந்தியாவின் தடையால், சீன நிறுவனங்கள் பாகிஸ்தான் விதை சந்தையை கைப்பற்றவும் வாய்ப்பு உருவாகியுள்ளது. இந்திய விதை உற்பத்தியாளர்கள் கடும் இழப்புகளை சந்தித்துக் கொண்டிருக்கும் நிலையில், சீன விதை நிறுவனங்கள் பாகிஸ்தானில் தங்கள் வர்த்தகத்தை பெருக்கிக் கொள்ள வாய்ப்பு உருவாகும்.

சீன நிறுவனங்கள் பாகிஸ்தானிலேயே விதை உற்பத்தியைத் தொடங்கவும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. பாகிஸ்தான், சீன நிறுவனங்கள் இணைந்து ஏற்கனவே பாசுமதி அரசியில் கலப்பினத்தை கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளன. பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் விவசாயத் துறையில் சீனாவுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்போவதாகவும், இரு நாடுகளும் இணைந்து விவசாயத் துறையில் பணியாற்றப் போவதாகவும் அறிவித்திருப்பதை இந்தியா கவனத்தில் கொள்ள வேண்டும்.

சீன விதைகள் இந்திய ரகங்களுடன் பொருந்திப் போவதில்லை என்பது மட்டும் நமக்குள் உள்ள ஒரே நேர்மறையான காரணி. ஆனாலும் அதிக மகசூல் காரணமாக கிடைக்கும் பொருளதாரச் செழிப்பு பாகிஸ்தானில் இந்திய விதைகளுக்கு தேவை ஏற்படாத நிலையை உருவாக்கலாம். விதை ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டுள்ள தடை காரணமாக, பன்னாட்டு நிறுவனங்கள் லாபம் ஈட்ட வழி பிறந்துள்ளது. இதனால், இந்திய-பாகிஸ்தான் விவசாயிகள், விதை உற்பத்தியாளர்கள்தான் பாதிப்புக்குள்ளாவார்கள்.

வழக்கம்போல வர்த்தகம்

ஊடகங்கள் வழியாக இரு நாட்டிலுமே மக்களிடையே வெறுப்புணர்வு பரப்பப்படுகிறது. யதார்த்தத்தைவிட புனைக்கதைகள் அதிகமாக மக்களிடையே கொண்டு சேர்க்கப்படுகின்றன. இந்தக் காலகட்டத்திலும் திருமண நிகழ்ச்சிகளில் பங்கேற்க பாகிஸ்தானிகளுக்கு இந்தியா நுழைவு இசைவு (விசா) வழங்குகிறது.

அரசியல் வேறுபாடுகள் இரு நாடுகளுக்கிடையே இருந்தாலும், 'நமது வர்த்தகத்துக்கு உகந்த நாடு' என்ற தகுதியை பாகிஸ்தானுக்கு இந்தியா வழங்கியுள்ளது. மோடி காலத்திலும் பாகிஸ்தானுக்கு இந்தத் தகுதி தொடரவே செய்கிறது. இருநாட்டு மக்களிடையே நடைபெறும் வர்த்தகத்தை தடுக்க முடியாது என்பதை இருநாட்டு அரசுகளுமே மறைமுகமாக உணர்ந்துள்ளன.

மனிதாபிமான முறையில் இந்தியா பாகிஸ்தானுக்கு மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களை ஏற்றுமதி செய்கிறது. விதை வர்த்தகத்துக்கு மட்டும் ஏன் தடைவிதிக்க வேண்டும்? இந்திய அத்தியாவசியப் பொருள்கள் சட்டத்தின்படி சில விதைகளும் பாகிஸ்தானுக்கு அத்தியாவசியப் பொருள்களே.

சில விதைகளை ஏழ்மையில் உழலும் பாகிஸ்தானியர்களும் பயன்படுத்துகின்றனர். தரமான விதைகளைப் பாகிஸ்தானுக்கு ஏற்றுமதி செய்வதால், அந்நாட்டில் ஊட்டச்சத்து குறைவால் பாதிக்கப்படுபவர்களுக்கு இந்தியா உதவு முடியும். இதனால், பாகிஸ்தான் கிராமப்புற ஏழை மக்களுக்கு இந்தியா உதவும் வாய்ப்பு உருவாகும்.

பாகிஸ்தான் விதைகளை இந்தியாவில் பயிரிட்டும் சோதித்தும் பார்க்கலாம். பாகிஸ்தான் விதை மையங்களுக்கு இந்தியாவில் ஆராய்ச்சி மையங்களும் ஏற்படுத்தலாம். சார்க் நாடுகளுக்கிடையே இதற்கான வசதி வாய்ப்புகளும் உள்கட்டமைப்பு வசதிகளும் நன்றாகவே உள்ளது.

இதனால், இரு நாடுகளிலும் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும். இந்திய விஞ்ஞானிகள், தொழில்நுட்ப நிபுணர்கள் ஆகியோரால் பாகிஸ்தான் நாட்டு விதைகளை மேம்படுத்த உதவும் வேலைவாய்ப்புகளைப் பெற முடியும். இந்திய தரச்சான்றிதழ் பெற்ற விதைகளுக்கு பாகிஸ்தானில் எப்படி அபரிமிதமான நற்பெயர் உள்ளதோ அதேபோலவே ஆப்கானிஸ்தான், நேபாளம் உள்ளிட்ட மற்ற நாடுகளிலும் மதிப்புள்ளது.

வர்த்தகம் சமாதானம்

இந்தியா - பாகிஸ்தான் இரு நாடுகளிலுமே அரசியலால் வர்த்தகம் பாதிக்கப்படாத வகையில் புதிய கொள்கைகள் வகுக்க வேண்டும். இப்போது, இரு நாட்டைச் சேர்ந்த விதை உற்பத்தியாளர்கள், மூன்றாவது நாட்டில் சந்தித்து தங்கள் வர்த்தகத்தை மற்றொரு நாட்டின் வழியாக மேற்கொள்வது பற்றி விவாதித்துக் கொண்டிருக்கின்றனர்.

இதனால், தேவையில்லாமல் அதிக செலவினங்கள்தான் ஏற்படும். இரு நாடுகளுக்கும் இடையே எளிதாகச் சரக்குகளைக் கொண்டுசெல்ல வழி உள்ளது. ஆனால், மற்றொரு நாட்டின் வழியாகக் கொண்டுசெல்வதால் அதிக செலவினத்தோடு கால விரயமும்தான் ஏற்படும். ஒரு விஷயத்தை நாம் நினைவில் வைக்க வேண்டும். இரு நாடுகளுக்கிடையே அரசியல் வேறுபாடு ஏற்பட்டு 70 ஆண்டுகள்தான் ஆகின்றன. ஆனால், வரலாறும் வர்த்தகமும் இரு நாடுகளுக்கிடையே காலம் காலமாகப் பின்னிப்பிணைந்தவை.

வட இந்தியர்கள் குறிப்பாக ராஜஸ்தான், பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த வர்த்தகர்கள் ஆண்டாண்டு காலமாக பாகிஸ்தானுடன் விதை ஏற்றுமதி உள்ளிட்ட பல தொழில்களில் ஈடுபட்டுவருகின்றனர். இரு நாடுகளுமே தங்கள் மக்களின் நலனைக் கருத்தில்கொண்டு இந்தியாவை துணைக்கண்டமாகப் பார்க்க வேண்டும்.

ஐரோப்பாவை எடுத்துக் கொண்டால், ஃபிரான்ஸ், ஜெர்மனி, பிரிட்டன் ஆகிய நாடுகள் பல ஆண்டுகளாக ஒன்றுடன் ஒன்று போரிட்டு லட்சக்கணக்காக மக்கள் உயிரிழக்கக் காரணமாக இருந்தன. ஆனால், நவீன காலகட்டத்தில் அந்த நாடுகள் பொருளாதார ரீதியாக பிணைந்துள்ளன.

போரில் ஈடுபடுவதைக் காட்டிலும் வர்த்தகத்திலும் சமாதானத்திலும் ஈடுபடுவது எளிது. இந்தியா- பாகிஸ்தான் நாடுகள் விதைகளை அத்தியாவசியத் தேவையாகக் கருத்தில்கொண்டு விதை உற்பத்தி, ஏற்றுமதியை ஊக்கப்படுத்த வேண்டும். எதிர்காலத்தையும் மக்கள் நலனைக் கருத்தில்கொண்டும் விதை ஏற்றுமதிக்கு உள்ள தடையை நீக்க வேண்டும். விவசாயிகளின் நலனை முன்வைத்து இருநாட்டு உறவுகளையும் மேம்படுத்துவற்கான அரிய வாய்ப்பு மோடி-இம்ரான்கான் ஆகியோருக்கு கிடைத்துள்ளது. அவ்வாறு செய்தால், கண்டிப்பாக இருவருமே நல்ல முயற்சியை விதைத்தவர்கள் ஆவார்கள்.

இந்தப் புத்தாண்டின் 'துவா' இதுதான்!

இதையும் படிங்க: நிர்பயா வழக்கு: குற்றவாளியின் கடைசி நிவாரண மனுக்கள் 14ஆம் தேதி விசாரணை

Intro:Body:

Between India and Pakistan, we should give seeds a chance

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.