ETV Bharat / bharat

மக்கள்தொகை பிரச்னையை கையாள்வது எப்படி ? - population stabilization

பெருகிவரும் மக்கள்தொகை நாட்டின் முன்னேற்றத்தை தொய்வுறச் செய்துள்ள நிலையில், இந்தப் பிரச்னை எந்தளவுக்கு சிக்கலாக உள்ளது, இதனை திறம்பட எதிர்கொள்ளவது எப்படி உள்ளிட்டவை குறித்து அலசி ஆராயும் கட்டுரை தொகுப்புதான் இது....

population bomb
population bomb
author img

By

Published : Dec 31, 2019, 10:43 AM IST

உலகின் இரண்டாவது மிகப்பெரிய மக்கள்தொகை கொண்ட நாடாக விளங்கும் இந்தியா, 2027ஆம் ஆண்டுக்குள் சீனாவை பின்னுக்குத் தள்ளிவிட்டு முதலிடத்தைப் பிடிக்கும் என ஐநா தெரிவித்துள்ளது. சுதந்திர தினத்தன்று டெல்லி செங்கோட்டையில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, மக்கள்தொகை பெருக்கம் தற்காலமட்டுமின்றி நாட்டின் எதிர்காலத்துக்கும் தீங்கு விளைவிக்கக்கூடும் என கவலை தெரிவித்திருந்தார்.

மேலும் பரவிவரும் தனிக்குடும்ப முறை குறித்து பாராட்டிப் பேசிய பிரதமர், தீங்கு விளைவிக்கும் மக்கள்தொகை பெருக்கத்தை எதிர்கொள்ள கச்சிதமான திட்டம் ஒன்றை அமைக்க வேண்டும் எனவும் விருப்பம் தெரிவித்திருந்தார்.

ஆனால், மக்கள்தொகையைக் கட்டுப்படுத்தும் நோக்கில் கொண்டுவரப்பட்ட அனைத்துத் திட்டங்களும் தோல்வியிலேயே முடிந்துள்ளன. இந்தியா, பாகிஸ்தான், நைஜீரியா உள்ளிட்ட ஒன்பது நாடுகள் உலக மக்கள்தொகையில் 50 விழுக்காடு பங்காற்றுவதாகவும் இந்த ட்ரண்ட் 2050ஆம் ஆண்டுவரை நீடிக்கும் என்றும் ஐநா கணித்துள்ளது.

இந்தியாவில் 50 ஆண்டுகளுக்கு முன்னர் 3.1 விழுக்காடாக இருந்த கருவுறுதல் விகிதம் (Fertlity rate), 2013ஆம் ஆண்டு 2.1ஆக சரிந்தது. ஆனால், மக்கள்தொகையோ 130 கோடியாக வீங்கிப் பெரிதாகி நாட்டை முடமாக்கியுள்ளது. இவையனைத்தையும் அடிப்படையாகக் கொண்டு நிதி அயோக் (NITI Ayog), 2035ஆம் ஆண்டுக்குள் மக்கள்தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்த எம்மாதிரியான நடவடிக்கைகள் மேற்கொள்ளலாம் என தீவிரமாக யோசித்துவருகிறது.

இதுதொடர்பாக ஆய்வு நடத்திய நிதி அயோக், நாட்டில் உள்ள 30 விழுக்காடு மக்கள் இனப்பெருக்கத்திற்குத் தகுதியான வயதில் உள்ளென எனவும், திருமணமான மூன்று கோடி பெண்களுக்கு குடும்பக் கட்டுப்பாடு வசதிகள் இல்லை என்றும் கண்டறிந்துள்ளது.

நாடு வளர்ச்சிப் பாதையை அடைய வேண்டுமெனில், தேவையற்ற கருவுறுதலைத் தவிர்க்குமாறு மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி, மக்கள்தொகையைக் கட்டுப்பாடுத்தவதற்கு தேவையான வசதிகள், சேவைகளைச் செய்ததர வேண்டும். இதனை நடைமுறைப்படுத்த கூர்மையான வியூகமாக வகுத்தல் அவசியம்.

மக்கள் தொகையை கட்டுப்பாடுத்தும் தேவை கண்டறிந்த முதல் நாடு இந்தியா. முதல் ஐந்தாண்டு திட்டத்தில் அளவான குடும்பம் என்ற வாசகம் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. 2000ஆம் ஆண்டு தேசிய மக்கள்தொகை கொள்கை உருவானபோது, இந்தியாவின் கருவுருதல் விகிதம் 3.2 விழுக்காடாக இருந்தது. தற்போது இது 2.2 விழுக்காடாக குறைந்துள்ளது. இந்தத் தரவு உண்மைதான்.

எனினும், உத்தரப் பிரதேசம், பிகார் போன்ற மாநிலங்களில் இன்னமும் மக்கள்தொகை அதிகளவில் பெருகிய வண்ணமே உள்ளது. இதனைக் கட்டுப்படுத்த நீதிமன்றம் தலையிட வேண்டும் என சில பொதுநல வழக்குகள் தொடரப்பட்டன. இரண்டு குழந்தைகளுக்கு மேல் பிள்ளை பெறக்கூடாது என்னும் சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என மாநில அரசுகளுக்கு உத்தரவிடுமாறு அந்த வழங்குகளில் கூறப்பட்டிருந்தன.

இதுதொடர்பான வழக்கை கடந்த செப்டம்பர் மாதம் விசாரணை செய்த உச்ச நீதிமன்றம், புதிய சட்டம் இயற்றுவது குறித்து மாநில அரசுகளுக்கு உத்தரவிட மறுத்துவிட்டது. இதேபோன்று மேலும் மூன்று வழங்குகள் உச்ச நீதிமன்றத்தில் நிலைவையில் உள்ளன.

இதையும் படிங்க : பிரெக்ஸிட் என்றால் என்ன? #brexit

மக்கள்தொகையைக் குறைக்க அரசுகளுக்கு அதிகாரம் வழங்க வேண்டும் என நீதிபதி வெங்கடாசலய்யா ஆணையத்தின் பரிந்துரையின் பேரில், 1976ஆம் 42ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. இந்தச் சட்டம் மக்கள்தொகை பெருக்கத்தைக் கணிசமாகக் குறைத்தது. 2000ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்தியாவின் கருவுறுதல் விகிதம் 23 விழுக்காடு அளவுக்கு சரிவைக் கண்டபோதிலும், பிகார், மகாராஷ்டிரா, நாகாலாந்து, உத்தரப் பிரதேசம், மணிப்பூர், ஜார்கண்ட் போன்ற மாநிலங்களில் மக்கள் தொகை பெருகதான் செய்கிறது.

நீதிமன்ற உத்தரவு, நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றுவதினால் மட்மே இப்பிரச்னையைத் தீர்த்துவிடமுடியாது. இதற்கு மத்திய, மாநில அரசுகள் அடிப்படையான சில மாற்றங்களைக் கொண்டுவரவேண்டும். இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர், மோடி அரசாங்கம் மக்கள்தொகை அதிகம்கொண்ட 146 மாவட்டங்களில் 'மிஷன் பரிவார் விகாஸ்' என்ற திட்டத்தைத் தொடங்கிவைத்தது.

நாட்டின் 44 சதவீத மக்கள்தொகையை தன்னகத்தே கொண்டுள்ள இந்த மாவட்டங்கள் அனைத்தும் பிகார், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், சத்தீஸ்கர், அசாம் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்தவையாகும். இதுமட்டுமின்றி இந்தப் பட்டியலில் உள்ள 115 மாவட்டங்கள், பெருமளவில் வளரிளம் பருவத்தினரே குழந்தைகளுக்குத் தாயாக பதியப்பட்டுள்ளனர். இதுதவிர இம்மாவட்டங்களில் பிரசவத்தின்போது நிகழும் இறப்பு, பெண்சிசுக் கொலை முறையே 25 -30 விழுக்காடாகவுன் 50 விழுக்காடாகவும் உள்ளது.

முன்னதாக, மக்கள்தொகையைக் கட்டுப்படுத்தும் வகையில், ஆன்டி-பிரகனன்சி கருவிகளின் உதவிகள் அளிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்திருந்தது. மக்கள்தொகை கட்டுப்பாடு தொடர்பான திட்டம் எந்தளவுக்கு வெற்றிபெற்றுள்ளன என்பது தெரியவில்லை. இரண்டு குழந்தைகள் வரம்பு சட்டங்கள் இயற்றினால், மக்களிடையே தேவையற்ற சச்சரவுகள் ஏற்படும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

2018ஆம் ஆண்டு வெளியான பொருளாதார ஆய்வறிக்கையில், ஆண் குழந்தைக்கு ஆசைப்படும் இந்திய சமூகத்தில் அந்தாண்டு சுமார் இரண்டு கோடியே 10 லட்சம் பெண்சிசுக்கள் கொல்லப்பட்டதாக அதிர்ச்சியூட்டும் தகவல் இடம்பெற்றுள்ளது. இதுபோன்ற நிலை போகபோக பரந்துவிரியும் அபாயமும் உள்ளது. இந்த இக்கட்டானச் சூழலில், அஷா, அங்கன்வாடி மையங்கள், முதல்நிலை மருத்துவ மையங்கள், சமூக விழிப்புணர்வு ஆகியவற்றை வளர்ப்பதன்மூலம் இந்தியாவின் மக்கள்தொகையை ஒரு நிலைக்குக் கொண்டுவரலாம் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

இதையும் படிங்க : 'ஆண்டி முதல் அரசாட்சி வரை' - இது நித்தியின் தாண்டவம்!

Intro:Body:

Population SPECIAL Story

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.