குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் தொடர் போரட்டம் நடைபெற்ற வந்த சூழலில், இந்த போராட்டக் கூட்டத்தில் மாணவி ஒருவர் பாகிஸ்தான் வாழ்க என்ற முழக்கம் எழுப்பியது பெரும் சர்ச்சையை கிளப்பியது.
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சித் தலைவர் அசாத்துதின் ஓவைசி தலைமையில் நடைபெற்ற சிஏஏ எதிர்ப்பு பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட 19 வயது மாணவி அமுல்யா லியோனா மேடையிலிருந்து பாகிஸ்தான் வாழ்க என்ற முழக்கத்தை எழுப்பினர்.
இது தொடர்பாக அமுல்யா மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர் சிறையில் அடைக்கப்பட்டார். அமுல்யாவுக்கான ஜாமீன் மனு கடந்த புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி அவருக்கு பிணை தர மறுத்தார். பின்னர் நேற்று அமுல்யாவின் வழக்கறிஞர் சார்பில் முறையான ஆவணங்கள் வழங்கப்பட்டு, அவர் வழக்கு விசாரணையில் ஒத்துழைப்பு தருவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து அவருக்கு நிபந்தனையுடன் கூடிய பிணை வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதையும் படிங்க: லடாக் சீன ஆக்கிரமிப்பு: நேருவை குறைகூறும் ராணுவ உயர் அலுவலர்கள்!