இதுகுறித்து காவலர்கள் கூறுகையில், '' இந்த சோதனை ரிக்கிக்கு சொந்தமான ராமநகரத்தில் உள்ள பண்ணை வீடு மற்றும் சதாசிவா நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஆகிய இடங்களில் நடத்தப்பட்டது'' என தெரிவித்தனர்.
இந்த வழக்கில் கன்னட நடிகர்களான ராகினி, சஞ்சனா கல்ரானி, மறைந்த முன்னாள் அமைச்சர் ஜீவராஜ் ஆல்வாவின் மகன் ஆதித்யா ஆல்வா என பெரும் புள்ளிகள் தொடர்புடையது. போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் விசாரித்து வந்த வழக்கை, தற்போது மத்திய குற்றப்பிரிவு காவலர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த வழக்கு தொடர்பாக கேரளாவைச் சேர்ந்த மூன்று பேர் பெங்களூருவில் கைது செய்யப்பட்டனர். இவர்கள்தான் கன்னட நடிகர்கள், பாடகர்களுக்கு போதைப்பொருள் வழங்கி வந்ததாகவும் கூறப்படுகிறது.
ரிக்கியின் வீடுகளில் சோதனை நடத்துவதற்கு முன்னதாக மத்திய குற்றப்பிரிவு காவலர்கள் பெங்களூருவின் ஐந்து முக்கிய பப்களில் சோதனை நடத்தியுள்ளனர். அதைப்பற்றி இணை ஆணையர் சந்தீப் பாட்டில் கூறுகையில், '' சில பப்களில் நடத்திய சோதனையின் மூலம் போதைப் பொருள் பயன்படுத்தப்பட்டு வந்தது கண்டறியப்பட்டது. அந்த பப்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது'' என்றார்.
இதையும் படிங்க: சமூக ஊடகங்களில் மும்பை காவல் ஆணையர் குறித்து அவதூறு பதிவு!