பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, மேற்கு வங்கத்தில் ஆட்சி செய்து கொண்டிருக்கும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், "முழு நாடும் அயோத்தி ராமர் கோயிலின் பூமி பூஜையில் கலந்து கொள்ள ஆர்வம் காட்டிய சமயத்தில், மேற்கு வங்க மக்கள் இந்நிகழ்வில் கலந்துக்கொள்வதைத் தடுக்க ஆகஸ்ட் 5ஆம் தேதி ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தார் மம்தா பானர்ஜி. ஆனால், அதே சமயம் பக்ரீத் பண்டிகை சமயத்தில் ஊரடங்கு திரும்பப் பெறப்பட்டது. இதன் மூலம் மேற்கு வங்க மாநில அரசின் கொள்கைகள் இந்து எதிர்ப்பு மனநிலைக் கொண்டு, சிறுபான்மையினரை திருப்திப்படுத்தும் கொள்கைகளைப் பின்பற்றுவது தெளிவாகிறது” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், மேற்கு வங்க மாநிலத்தில் 100க்கும் மேற்பட்ட பாஜக செயற்பாட்டாளர்கள் அரசியல் காரணங்களுக்காக உயிரிழந்தும் அம்மாநில அரசு மௌனமாக இருப்பது குறித்தும் அவர் விமர்சித்துள்ளார்.