பொருளாதார சீர்திருத்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக தற்போதுள்ள 27 பொதுத்துறை வங்கிகளை இணைத்து 12 வங்கிகளாக்கப்படும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு வெளியிட்டார். இதற்கு வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் 26 மற்றும் 27ஆம் தேதிகளில் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவிக்கப்பட்டது. மேலும் 5 நாட்கள் வேலை, வரைமுறையற்ற வேலை நேரத்தை முறைப்படுத்த கோரிக்கை விடுத்திருந்தனர்.
இந்நிலையில் கோரிக்கைகளை பரிசீலிப்பதாக நிதித்துறை செயலர் கூறியதால் வேலைநிறுத்தம் ஒத்திவைக்கப்படுவதாக அனைத்திந்திய வங்கி அலுவலர்கள் கூட்டமைப்பு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.