டெல்லியில் உள்ள பங்களா சாஹிப் குருத்வாரா சன்னதி வளாகத்திற்குள் அனைத்து வகையான நெகிழிப் பொருட்களும் பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
குரு நானக் தேவ் ஜி-யின் 550ஆவது பிறந்த நாளை நினைவுகூரும் திட்டங்களின் ஒரு பகுதியாக பங்களா சாஹிப் குருத்வாரா வளாகத்திற்குள் நெகிழி பயன்பாட்டிற்கு டெல்லி சீக்கிய குருத்வாரா மேலாண்மைக் குழுவின் (டி.எஸ்.ஜி.எம்.சி) தலைவர் மஞ்சிந்தர் சிங் சிர்சா தடை விதித்துள்ளார்.
பக்தர்களுக்குப் பிரசாதம், பழங்கள் போன்றவற்றை கொடுப்பதற்கு ஒவ்வொரு நாளும் சராசரியாக ஐந்தாயிரம் நெகிழிப் பைகள், தெர்மகோல் போன்ற பொருட்கள் பயன்படுத்தப் படுகின்றன. ஆனால், இனிவரும் காலங்களில் இலையிலான தட்டுகள், கிண்ணங்கள் போன்றவற்றை மட்டும் பயன்படுத்த வேண்டும் என அவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க : நெகிழிக்கு மாற்றாகக் களமிறங்கிய அரசுப் பள்ளி மாணவிகள்!