வங்கதேசத்தின் பிரதமராகப் பதவி வகித்தவர் பங்கபந்து ஷேக் முஜிபுர் ரகுமான். இவர் அந்நாட்டின் தந்தை என அழைக்கப்படுகிறார். அவருடைய நூறாவது பிறந்தாளை முன்னிட்டு, வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா, விழாவில் கலந்துகொள்ள பிரதமர் மோடிக்கு அழைப்புவிடுத்தார். ஆனால், கரோனா அச்சுறுத்தல் காரணமாக பிரதமர் மோடி காணொலி மூலம் பங்கேற்றுப் பேசினார்.
அவர் பேசியதாவது:
கடந்த நூற்றாண்டின் முக்கியமான தலைவர்களில் ஷேக் முஜிபுர் ரகுமானும் ஒருவர். நமக்கெல்லாம், அவருடைய வாழ்க்கை பெரிய பாடம். அதிலிருந்து நிறைய கற்றுக் கொள்ள வேண்டும். அவருடைய பிறந்தநாள் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள முடியாதது வருத்தமளிக்கிறது.
ஷேக் முஜிபுர் ரகுமான் வங்கதேசத்தை அழிவுப்பாதையிலிருந்து வெளியேற்றி, நாட்டை முற்போக்கான சமூகமாக மாற்ற அதிக நேரத்தை செலவிட்டார்.
அவருடைய கனவை நிறைவேற்றும்வகையில், வங்கதேச இளைஞர்கள் இரவு பகலாக உழைக்கிறார்கள். அவர்களைப் பார்க்கும்போது மட்டற்ற மகிழ்ச்சி ஏற்படுகிறது. பிரதமர் ஷேக் ஹசீனா வங்கதேசத்தை முன்னேற்றப்பாதையில் செலுத்துகிறார்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: இரண்டு லட்சத்தை நெருங்கும் கோவிட்-19 பாதிப்பு