ETV Bharat / bharat

பிபிஇ கிட் ஏற்றுமதி தடையை நீக்கிய வெளிநாட்டு வர்த்தகர்கள் இயக்குநரகம்!

author img

By

Published : Jun 29, 2020, 7:08 PM IST

டெல்லி: பிபிஇ கிட் (Personal Protective Equipment Kit) ஏற்றுமதி தடையை நீக்கிவிட்டு, மாதத்திற்கு 50ஆயிரம் யூனிட்களை மட்டுமே ஏற்றுமதி செய்துகொள்ள வெளிநாட்டு வர்த்தகர்கள் இயக்குநரகம் அனுமதி வழங்கியுள்ளது.

ppe
ppe

நாட்டில் கரோனா வைரஸ் தாக்கம்‌ அதிகளவில் உள்ளது. மக்கள் பலரும் முகக் கவசம் அணிந்தும், சானிடைசர் உபயோகித்தும் தான் தங்களது அன்றாட வாழ்க்கையை நடத்தி வருகின்றனர். மருத்துவர்களும் செவிலியரும் பிபிஇ கிட் ((Personal Protective Equipment Kit) அணிந்துதான் பணியாற்றி வருகின்றனர். இதனால், நாட்டில் தனிநபர் பாதுகாப்பு உபகரணங்களில் பற்றாக்குறை ஏற்பட்டுவிடக்கூடாது என்ற காரணத்திற்காக ஏற்றுமதி தடை செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில், வெளிநாட்டு வர்த்தகர்கள் இயக்குநரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கோவிட்-19 தனிநபர் பாதுகாப்பு உபகரணங்களை தடை செய்யப்பட்ட பட்டியலிலிருந்து (Personal Protective Equipment Kit) கட்டுப்பாடுகளுடன் ஏற்றுமதி பட்டியலுக்கு மாற்றியுள்ளது‌. மாதந்தோறும் 50 ஆயிரம் யூனிட்களை மட்டுமே ஏற்றுமதி செய்ய அனுமதி அளித்துள்ளோம்.

மேலும் ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் (Apparel Export Promotion Council) சமீபத்தில் வங்கதேசம், இந்தோனேசியா, பாகிஸ்தான் போன்ற பல நாடுகள் பிபிஇ ஏற்றுமதி மீதான தடையை நீக்கியுள்ளது எனத் தெரிவித்தது'' என அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஏஇபிசி (Apparel Export Promotion Council) தலைவர் ஏ.சக்திவேல் கூறுகையில், "ஏற்றுமதியில் போட்டிக்கு வரும் நாடுகளுக்கு மத்தியில் இழப்பை சந்திக்க நேரிட வாய்ப்புள்ளதாகப் பயப்படுகிறோம். உள்நாட்டு தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு பிபிஇ உபகரணங்கள் போதுமான அளவில் உள்ளதால், தாராளமாக ஏற்றுமதிக்கு அனுமதிக்கலாம்" எனத் தெரிவித்தார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.