குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவர் நீது தேஜ்வானி. இவர் குடியிருப்புப் பகுதிகளுக்கு குடிநீர் முறையாக வழங்குவதில்லை எனக் கூறி அஹமதாபாத்தில் உள்ள நரோடாவில் போராட்டத்தில் ஈடுபட்டார்.
நிகழ்விடத்திற்கு வந்த பாஜக எம்எல்ஏ பல்ராம் தவானி, அவரை கலைந்து செல்லும்படி கூறியுள்ளார். இதற்கு மறுத்த அவரை பல்ராம் தவானி கடுமையாக தாக்கி முடியை பிடித்து இழுத்து சாலையில் தள்ளினார்.
இந்தச் சம்பவத்தை வீடியோ எடுத்த பொதுமக்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். இந்த வீடியோ வைரலாகியதால் பல தரப்பு பாஜகவினரை கடுமையாக விமர்சித்தனர். பெண்னை தாக்கியதற்கான காரணத்தை விளக்கம் அளிக்கக் கோரி பாஜக தலைமை, பல்ராம் தவானிக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இந்நிலையில் நீது தேஜ்வானி தனக்கு ராக்கி கட்டிவிடும் புகைப்படத்தை பல்ராம் தவானி இன்று சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். மேலும், நீது தனக்கு சகோதரி என்றும், அவரிடம் தான் மன்னிப்பு கேட்டுவிட்டதாகவும் பல்ராம் பதிவு செய்துள்ளார்.
இந்த நிலையில் நடிகர் மாதவன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் அந்த பதிவில்
“சாரி" கேட்டதை ஏற்றுக்கொள்ள முடியாது. அந்த சட்டப்பேரவை உறுப்பினர் பதவியில் இருந்து தூக்கி எறிய வேண்டும். சிறையில் தள்ளவேண்டும். இந்த நாட்டுக்கு கேவலமான பெயரைத் தேடித் தந்திருக்கிறார் என்று பதிவிட்டுள்ளார்.