ETV Bharat / bharat

உயிரிழந்த தாயை எழுப்பும் குழந்தை... நெஞ்சை உருக்கும் கொடுமை! - குடி பெயர் தொழிலாளர்களின் நெருக்கடி

பாட்னா: சிறப்பு ரயிலில் பிகாருக்கு வந்த பெண் உயிரிழந்த நிலையில், அதை அறியாத அவரது குழந்தை அவரை எழுப்ப முயன்ற சம்பவம் மனதை நிலைகுலைய செய்கிறது.

உயிரிழந்த தாயை எழுப்பும் குழந்தை... நெஞ்சை உருக்கும் பாசப் போராட்டம்!

author img

By

Published : May 27, 2020, 5:23 PM IST

Updated : May 27, 2020, 5:47 PM IST

ஊரடங்கால் வேலையிழந்து சொந்த மாநிலங்களுக்கு திரும்பும் குடிபெயர் தொழிலாளர்கள் வீட்டை அடையும் முன் பல்வேறு கொடுமைகளை அனுபவித்து வருகின்றனர். கால்நடையாக செல்லும் சிலர் ஊருக்கு அருகிலேயே மயங்கி விழுந்து உயிரிழக்கும் கோர நிகழ்வுகளும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.

உணவு பற்றாக்குறை, நீரிழப்பு என குடி பெயர் தொழிலாளர்களுக்கு ஏற்படும் சிக்கல்கள் ஏராளம். இந்நிலையில், தன்னுடைய ஊருக்கு சிறப்பு ரயிலில் சென்ற பெண் ஒருவர் தற்போது உயிரிழந்துவிட்டார்.

உயிரிழந்த தாயை எழுப்பும் குழந்தை... நெஞ்சை உருக்கும் பாசப் போராட்டம்!

குஜராத்தில் இருந்து சிறப்பு ரயில் மூலம் பிகார் மாநிலம் முசாபர்பூர் ரயில் நிலையத்திற்கு வந்த ஒரு பெண், ஊட்டச்சத்து பற்றாக்குறையால் அவதிப்பட்டிருக்கிறார். பசி, உடல் வெப்பம் அதிகரிப்பு, நீர்ச்சத்து குறைந்த நிலையில், ரயில் முசாபர்பூரை நெருங்கும்போது உயிரிழந்துள்ளார். இந்நிலையில் யாரும் பெற்றுக் கொள்ளாத நிலையில் நிராதரவாக அவரது உடல் ரயில் நிலைய நடைமேடையில் கிடந்துள்ளது.

தாய் இறந்ததை அறியாத அவரது பிஞ்சு குழந்தை, தாயை எழுப்ப முயற்சிக்கிறது. தாய் மீது போர்த்தப்பட்டிருந்த துணியை இழுக்கிறது. அந்தக் குழந்தையை மூத்தக் குழந்தை தடுத்து வெளியே இழுக்கிறது. இதைப் பார்த்த அனைவரும் கண்ணீர் விட்டுள்ளனர். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க: தாயார் கண்முன்னே உயிரிழந்த குழந்தைகள்

Last Updated : May 27, 2020, 5:47 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.