அயோத்தி வழக்கினை 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரணை செய்து வருகிறது. இதற்கான இறுதிகட்ட விசாரணை அக்.18ஆம் தேதியுடன் முடிவடைந்த நிலையில், விரைவில் தீர்ப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் அயோத்தி நில விவகாரம் குறித்து வழக்கு தொடர்ந்த இஸ்லாமிய அமைப்புகள் வழக்குக்குறித்து தங்களது முடிவை எழுத்துப்பூர்வமான மனுவாக சமர்பிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து இஸ்லாமிய அமைப்பு சார்பாக வாதாடும் வழக்கறிஞர் ஒருவர் பேசுகையில், ''பல்வேறு இஸ்லாமிய அமைப்புகள், உச்சநீதிமன்ற பதிவாளர் என பலரும் எழுத்துப்பூர்வ மனுவை சமர்பிப்பதற்கு உச்சநீதிமன்றத்தில் ஆட்சேபனை தெரிவித்தன.
ஆனால் தற்போது அனைத்து அமைப்புகளும் தங்களின் எழுத்துப்பூர்வ மனுவை உச்சநீதிமன்றத்தில் சமர்பித்துள்ளோம். அந்த மனுவினை உச்சநீதிமன்ற பதிவாளருக்கு நீதிபதிகள் அமர்வு எடுத்துச்செல்ல வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்றார்.
இதையும் படிக்கலாமே: அயோத்தியா வழக்கு கடந்துவந்த பாதை...!