இந்தியாவில் மிகவும் பிரபலமான கார் நிறுவனம் மாருதியின் படைப்புகளுக்கு பஞ்சம் இல்லை. மக்கள் பயன்பாட்டில் மாருதி நிறுவனத்தின் கார்களை தான் அதிகளவில் பார்க்க முடியும். இத்தகையே, நம்பர் ஒன் கார் நிறுவனத்தால் ஏப்ரல் மாதத்தில் ஒரு காரை கூட விற்பனை செய்ய முடியவில்லை என நிர்வாகம் தரப்பில் அதிகாரப்பூர்வாக தெரிவித்துள்ளனர்.
ஊரடங்கு உத்தரவு காரணமாக மாருதி ஆலைகளில் கார்களின் உற்பத்தி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. அதே போல், மாருதியின் பிரத்யேக ஷோரூம்களும் பல்வேறு இடங்களில் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே, மாருதி நிறுவனம் முந்த்ரா துறைமுகத்திலிருந்து வெளிநாடுகளுக்கு 632 வாகனங்களை ஏற்றுமதி செய்துள்ளன.
அந்த வகையில், பிரபலமான எம்.ஜி மோட்டார் இந்தியா, மஹிந்திரா நிறுவனங்களிலும் ஒரு கார் கூட விற்பனை ஆகாதது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனத்தின் டிராக்டர் விற்பனை ஏப்ரல் மாதத்தில் 4,772 ஆக குறைந்துள்ளது. இதே மாதத்தில் கடந்த ஆண்டு 28 ஆயிரத்து 552 யூனிட்கள் விற்பனை ஆகியுள்ளது. ஊரடங்கால் ஆட்டோமொபைல் துறைக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ரிலையன்ஸ் நிறுவனத்தின் லாபம் கடும் சரிவு!