மறைந்த முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாயின் பிறந்தநாளையொட்டி (டிசம்பர் 25ஆம் தேதி) லக்னோவில் அமைைந்துள்ள லோக் பவனில் (உத்தரப் பிரதேச முதலைச்சர் அலுவலகம்) 25 அடியில் உருவாக்கப்பட்ட அவரது வெண்கலச் சிலை திறக்கப்பட்டது. ஜெய்ப்பூரைச் சேர்ந்த கட்டடக்கலை நிபுணர் ராஜ் குமாரால் வடிவமைக்கப்பட்ட இந்தச் சிலையை, பிரதமர் நரேந்திர மோடி திறந்தவைத்தார்.
இந்நிலையில், வாஜ்பாயின் சிலையை பார்வையிட ஞாயிறுதோறும் பொதுமக்கள் அனுமதிக்கப்படுகிறார்கள். அவ்வாறு சிலையைக் காண கூட்டமாக வரும் பொதுமக்கள் வாஜ்பாய் சிலை முன்பு நின்று செல்ஃபி எடுத்துக்கொள்கின்றனர்.
இதுகுறித்து ரிஜி மெஹ்ரோத்ரா என்பவர் கூறுகையில், "என் தாத்தா அடல் பிஹாரி வாஜ்பாயின் நண்பராவார். இங்கு வந்து அவரது சிலையைப் பார்ப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்" என முகம் மலரக் கூறினார்.
வாஜ்பாயின் சிலையை சுற்றிலும் நுற்றுக்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க : ஈராக்கிலுள்ள அமெரிக்க படைகள் மீது மீண்டும் தாக்குதல்!