வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் தலைமையகத்தில் சட்டப் பிரிவில் பணிபுரியும் ஒரு அலுவலருக்கும், மத்திய ஐரோப்பா பிரிவின் ஆலோசகருக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து, வெளியுறவு அமைச்சகத்தில் பணியாற்றும் அனைவரையும் 14 நாள்கள் சுய தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், அனைத்து அலுவலர்களும் அரசு கூறிய விதிமுறைகளின்படி பணியாற்ற வேண்டுமென கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: வந்தே பாரத்: இந்தியர்களை மீட்க கூடுதல் விமானங்கள்...!