ETV Bharat / bharat

போடோலாந்து குழுவின் தலைவரானார் அசாம் ஆளுநர் - போடோலாந்து குழு

கௌஹாத்தி: போடோலாந்து பிராந்திய குழுவின் தலைமைப் பொறுப்புக்கு அசாம் மாநில ஆளுநர் ஜகதீஷ் முகி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

bodo
bodo
author img

By

Published : Apr 28, 2020, 10:13 AM IST

Updated : Apr 28, 2020, 11:29 AM IST

அசாம் மாநிலத்தில் வசிக்கும் முக்கிய பிராந்திய குழுவாக போடோலாந்து விளங்குகிறது. அம்மாநிலத்தின் நான்கு மாவட்டங்கள் போடோலாந்து பிராந்தியமாகக் கருதப்படுகிறது. இந்தக் குழு தனது தனித்துவத்தை முன்னிறுத்த நீண்ட நாட்களாகவே தனி மாநிலம் உள்ளிட்ட பல கோரிக்கைகளை வெளிப்படுத்திவருகிறது.

இதையடுத்து போடோலாந்து பிரநிதித்துவத்திற்காக பிரத்யேக பிராந்திய குழு ஒன்று அமைக்கப்பட்டு, இந்தக் குழு அப்பகுதி மக்கள் நலனுக்காக பணியாற்றிவருகிறது.

இந்நிலையில், இந்தக் குழுவின் தலைவராக இருந்த ஹக்ரமா மஹிலாரியின் பதவிக்காலம் தற்போது நிறைவடைந்த நிலையில், அதன் தலைவராக அசாம் மாநில ஆளுநர் ஜக்தீஷ் முகி பதவியேற்றுள்ளார். இந்திய அரசியல் அமைப்பின் ஆறாவது அட்டவணையின் கீழ் உள்ள அதிகாரத்தின் மூலம் இந்த பொறுப்பை ஆளுநர் ஏற்றுள்ளார்.

அசாமின் கோக்ரஜார், பக்சா, சிரங், உடல்குரி ஆகிய மாவட்டங்கள் போடோலாந்து பிராந்தியமாக வரையறை செய்யப்பட்டு நிர்வகிக்கப்படுகின்றன.

இதையும் படிங்க: கரோனாவால் குஜராத்தில் அதிக உயிரிழப்பு - காரணத்தை கண்டறிய ஆராய்ச்சி

Last Updated : Apr 28, 2020, 11:29 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.