ஏஐஎம்எம் கட்சி தலைவர் அசாதுதீன் ஓவைஸி மத்திய பிரதேச மாநிலம் ஔரங்கபாத்தில் பரப்புரை மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், “ஒவ்வொரு இடத்திலும் பரப்புரையில் மோடி பேசும்போது பயங்கரவாதம் கட்டுப்படுத்தப்பட்டுவிட்டதாக பேசுகிறார். அப்படியென்றால் மலேகான் பகுதியில் உள்ள மசூதி அருகே குண்டு வைத்து ஆறு பேரை கொன்ற சாத்வி பிரக்யா சிங்குக்கு தேர்தலில் போட்டியிட எதற்காக வாய்ப்பளிக்கப்பட்டது?
இதுதான் பயங்கரவாதத்தை கட்டுப்படுத்தியதற்கு ஆதாரமா? எனது சாபத்தால்தான் ஹேமந்த் கர்கரே உயிரிழந்ததாக சாத்வி சிங் கூறும்போது பிரதமர் மோடியால் மும்பையில் எப்படி வாக்கு சேகரிக்க முடியும். இன்னும் ஒரு மாதத்தில் பிரதமர் மோடி முன்னாள் பிரதமராவது உறுதி” என்றார்.