ETV Bharat / bharat

வரலாற்றுப் பிழை திருத்தப்பட்டுள்ளது; மோடி, அமித் ஷாவுக்கு வாழ்த்துகள்! - அருண் ஜேட்லி - அருண் ஜெட்லி

ஜம்மு - காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்டுவந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ததன் மூலம் இந்தியா செய்த வரலாற்றுப் பிழை திருத்தப்பட்டுள்ளது என முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி பதிவிட்டுள்ளார்.

அருண் ஜெட்லி
author img

By

Published : Aug 5, 2019, 5:08 PM IST

Updated : Aug 5, 2019, 5:31 PM IST

ஜம்மு - காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்டுவந்த சிறப்பு அந்தஸ்தான சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்படுவதாக மாநிலங்களவையில் மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா அறிவித்தார். இதன்மூலம் ஜம்மு - காஷ்மீர், லடாக் ஆகிய இரு பகுதிகளும் இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்படுவதாக தெரிவித்தார்.

இது குறித்து கருத்து பதிவிட்டுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி, சட்டப்பிரிவு 370 தொடர்பான மத்திய அரசின் முடிவு இந்திய ஒருங்கிணைப்புக்கான ஒரு முக்கியமானது. இந்த முடிவால் மக்களுக்கு அதிக நன்மை ஏற்படும். காஷ்மீரில் தொழிற்சாலைகளும் கல்வி சார்ந்த தனியார் நிறுவனங்களும் அதிகமாக உருவாக்கப்படும். இத்தனை ஆண்டுகளாக காஷ்மீரில் அரசியல் தலைவர்கள் செய்துவந்த அரசியல், இந்த சட்டப்பிரிவை நீக்கியதன் மூலம் முடிவுக்கு வரும்.

  • My complements to the Prime Minister Shri Narendra Modi ji and the Home Minister Shri Amit Shah for correcting a historical blunder.

    — Arun Jaitley (@arunjaitley) August 5, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ஜம்மு - காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்டுவந்த சிறப்பு சட்டப்பிரிவு அந்தஸ்து ஒரு தற்காலிக ஏற்பாடு மட்டுமே. எனவே அதனை நிரந்தரமாக கருத முடியாது. சிறப்பு அந்தஸ்து சட்டப்பிரிவு மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்தும்.

இந்தியா போன்ற வளரும் நாடுகள் இதனை அனுமதிக்காது. இந்தியா செய்த வரலாற்றுப் பிழை இன்று திருத்தப்பட்டுள்ளது. சட்டப்பிரிவு 35ஏ பின் வாசல் வழியாக வந்தது. எனவே அது ரத்து செய்யப்பட வேண்டியதுதான். இந்தச் சட்டப்பிரிவை ரத்து செய்ததற்காக பிரதமர் மோடி, உள் துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோருக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன் எனப் பதிவித்துள்ளார்.

Intro:Body:

ARUN JAITELY ON KASHMIR 370 

Conclusion:
Last Updated : Aug 5, 2019, 5:31 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.