ராய்ப்பூர்: சத்தீஸ்கர் மாநிலத்தில் ஒரு கோடிய 60 லட்சம் ரூபாய் மதிப்பிலான கஞ்சாவை காய்கறி லாரியில் கடத்திச் சென்ற கும்பலை காவல் துறையினர் மடக்கிப் பிடித்தனர்.
சத்தீஸ்கர் மாநிலத்திலுள்ள மகாசமுந்த் காவல் துறையினருக்கு, சிலர் காய்கறி லாரியின் மூலம் கஞ்சா கடத்திச் செல்வதாக ரகசியத் தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, சோதனைச் சாவடிகளிலுள்ள காவல் துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், சத்தீஸ்கர்-ஒடிசா மாநிலங்களின் எல்லையில் சோதனைச் சாவடியில் காவல் துறையினர், கஞ்சா கடத்திவந்த லாரியை மடக்கினர். தொடர்ந்து லாரியில் சோதனை செய்ததில், 800 கிலோ எடையுள்ள சுமார் ஒரு கோடியே 60 லட்சம் ரூபாய் மதிப்பிலான கஞ்சா இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து, அவர்களிடம் நடத்திய விசாரணையில், அந்தக் கும்பல் கஞ்சாவை ஒடிசாவில் வாங்கி, விற்பனை செய்வதற்காக எடுத்துச் சென்றது தெரியவந்தது. தொடர்ந்து அவர்களைக் கைதுசெய்த காவல் துறையினர், அவர்களிடம் விசாரணை நடத்திவருகின்றனர்.
இதையும் படிங்க: ஆந்திரா டூ சென்னை: அம்பலமான கஞ்சா விற்பனை ஐடியா!