ஜம்மு- காஷ்மீரின் தோடா மாவட்டத்தில் இன்று அதிகாலை பாதுகாப்புப் படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே நடைபெற்ற மோதலில், பாதுகாப்புப் படை வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
ஜம்மு காஷ்மீர் காவல்துறையினரும், பாதுகாப்புப்படையினரும் தீவிரவாதிகளுக்கு எதிராக இன்று காலை தொடங்கிய மோதல், தொடர்ந்து நடைபெற்று வருவதாக ஜம்மு- காஷ்மீர் காவல்துறை தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.
தோடா மாவட்டத்தில் நடைபெறும் இந்த மோதல், பாதுகாப்புப் படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே இந்தாண்டு நடைபெறும் இரண்டாவது மோதலாகும். முன்னதாக நடைபெற்ற மோதலில் ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பைச் சேர்ந்த தளபதி ஹாரூன் அப்பாஸ் கொல்லப்பட்டார்.
இந்த மாத தொடக்கத்தில், அந்த அமைப்பைச் சேர்ந்த இருவர் தோடா மாவட்டத்தில் சில ஆயுதங்கள் மற்றும் வெடி மருந்துகளுடன் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:'கோவிட்-19ஐ வெல்ல உலக நாடுகளை ஒன்றிணைத்து செயல்படுவது அவசியம்' - ட்ரம்ப்புக்கு மோடி பதில்