ETV Bharat / bharat

வானிலை காரணமாக மேலும் மோசமடையும் டெல்லி காற்று மாசு! - டெல்லி காற்று மாசு

டெல்லி: காற்றோட்டம் குறைவதால் வரும் நாட்களில் காற்று மாசு, மேலும் மோசமடையக்கூடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Delhi
author img

By

Published : Nov 20, 2019, 11:10 AM IST

டெல்லியிலுள்ள காற்று மாசு நாளுக்கு நாள் மோசமாகிக்கொண்டே செல்கிறது. இதற்கு அரசு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று மக்கள் போராடி வருகின்றனர். இந்நிலையில், ஸ்கைமெட் என்ற தனியார் வானிலை ஆய்வு மையம் டெல்லி காற்று மாசு குறித்துக் கவலையளிக்கும் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது.

ஸ்கைமெட் வெளியிட்டுள்ள தகவலின்படி, டெல்லியில் காற்று மாசு இன்று மிக மோசமான நிலையில் இருக்கும் என்றும்; இமயமலையின் மேற்குப் பகுதியில் ஏற்பட்டுள்ள வானிலை மாற்றம் தேசியத் தலைநகர் பகுதியின் காற்றோட்டத்தைப் பாதித்துள்ளது என்றும் கூறியிருக்கிறது. தலைநகர் பகுதியின் காற்றோட்டம் குறைவதால் நவம்பர் 21, 22 ஆகிய தேதிகளில் காற்று மாசு இன்னும் மோசமடையலாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது டெல்லி மட்டுமல்லாமல் டெல்லி, நொய்டா, குருகிராம், ஃபரிதாபாத், காசியாபாத் ஆகிய பகுதிகளிலுள்ள காற்றின் தரத்தையும் பாதிக்கும் என்றும்; தனியார் வானிலை மையம் எச்சரித்துள்ளது.

கடந்த வாரம் 450 என்ற அளவிலிருந்த காற்று தரக் குறியீடு, ஞாயிற்றுக்கிழமைக்குப் பின் படிப்படியாக முன்னேறி 357-க்கு வந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: டெல்லி காற்று மாசு - டைட்டானிக் ஹீரோ கவலை!

Intro:Body:

Delhi: AQI likely to be very poor today, may deteriorate further in coming days

https://www.etvbharat.com/english/national/state/delhi/delhi-aqi-likely-to-be-very-poor-today-may-deteriorate-further-in-coming-days/na20191120030554809

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.