ETV Bharat / bharat

மகாராஷ்டிராவை தொடர்ந்து ஆந்திராவில் தீவிரமடையும் கரோனா - Andhra pradesh COVID 19 cases

அமராவதி: ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கரோனா பாதிப்பு பதிவாகியுள்ளது.

கரோனா
கரோனா
author img

By

Published : Aug 5, 2020, 9:44 PM IST

இந்தியாவில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகம் கொண்ட மாநிலங்களில் முதலிடத்தில் மகாராஷ்டிராவும், இரண்டாம் இடத்தில் தமிழ்நாடும் உள்ளன. அதற்கு அடுத்தபடியாக மூன்றாம் இடத்தில் ஆந்திரப் பிரதேசம் உள்ள நிலையில், கடந்த சில நாள்களாக அங்கு பாதிப்பு எண்ணிக்கை தொடர்ச்சியாக அதிகரித்துவருகிறது.

கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் ஆந்திராவில் 10 ஆயிரத்து 128 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதரத் துறை அறிவித்துள்ளது. நாட்டில் மகாராஷ்டிரா மாநிலத்தில் மட்டும்தான் நாளொன்றுக்கு 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கரோனா பாதிப்பு பதிவாகிவந்த நிலையில் தற்போது ஆந்திராவும் அந்த எண்ணிக்கையைக் கடந்துள்ளது கவலையளிக்கிறது.

இதுவரை அங்கு ஒரு லட்சத்து 86 ஆயிரத்து 461 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், ஆயிரத்து 681 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அரசின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படிங்க: மொழிப் பிரச்னையால் இஐஏ அறிக்கைக்கு இடைக்கால தடை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.