ETV Bharat / bharat

'ஆன்டிஜென் மூலம் பரிசோதனை... ஆயுர்வேதா முறையில் சிகிச்சை' - நாராயணசாமி - ரெம்டிஸ்விர் மருந்து

புதுச்சேரி: ஆன்டிஜென் கிட் மூலம் மக்களுக்கு பரிசோதனை செய்வதோடு, ஆயுர்வேதா, சித்தா முறையில் கரோனா நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்படும் என புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

puducherry cm
puducherry cm
author img

By

Published : Aug 30, 2020, 7:06 PM IST

இது குறித்து புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி வெளியிட்டுள்ள வீடியோ பதிவில்,

"அன்லாக் 4 என்கிற மத்திய அரசின் அறிவிப்பின்படி அரசியல் நிகழ்ச்சிகள், மத நிகழ்ச்சிகள், பொது நிகழ்ச்சிகள் புதுச்சேரியில் நடத்தப்படும். புதுச்சேரியில் காலை 6 மணி முதல் மாலை 7 மணி வரை அனைத்துக் கடைகளும் திறந்திருக்கும். இரவு 8 மணி முதல் காலை 5 மணி வரை முழு ஊரடங்கு இருக்கும். இது மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி செப்டம்பர் 1ஆம் தேதி முதல் செப்டம்பர் 30ஆம் தேதி வரை நடைமுறைப்படுத்தப்படும்.

புதுச்சேரியில் அரசு, தனியார் மருத்துவமனைகளில் ஆன்டிஜென் கிட் மூலம் தினம்தோறும் மூன்றாயிரம் பேருக்கு பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதனால் குறைந்தபட்சம் ஒரு மணி நேரத்திற்குள் பொதுமக்களுக்கு முடிவு தெரிவிக்கப்படும்.

மருத்துவர், செவிலியர், மருத்துவப் பணியாளர்களின் பற்றாக்குறையைக் குறைக்க 488 பேர் புதிதாக நியமிக்கப்படுவார்கள். மேலும் ஜிப்மர் மருத்துவமனையில் புதிதாக 700 படுக்கைகள், கதிர்காமம் அரசு மருத்துவமனையில் 600 படுக்கைகள், ஆக்சிஜன் வசதியோடு இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தனியார் மருத்துவமனைகளில் கரோனா பரிசோதனை கட்டணத்தை அரசே செலுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

புதுச்சேரியில் 32 இடங்களில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். இதற்கு அதிக அளவு எதிர்ப்பு வந்ததையடுத்து மறுபரிசீலனை செய்ய ஆட்சியருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் (ரெம்டிஸ்விர்) Remdesivir மருந்து வாங்கப்பட்டு தேவையான நோயாளிகளுக்கு செலுத்தப்படும். ஆயுர்வேதா, சித்தா முறையில் கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரியில் இறப்பு விகிதத்தை குறைக்க மருத்துவர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: புதுச்சேரி காங். தலைவருக்கு கரோனா தொற்று உறுதி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.