ETV Bharat / bharat

கரோனா வைரஸை கட்டுப்படுத்தும் ரத்த புரத மருந்து - இந்தியாவில் கரோனா வைரஸ் தாக்குதல்

ஹைதராபாத்: கரோனா வைரஸ் தொற்றுவிலிருந்து விடுபட, ஆன்டிபாடிகள் என்னும் ரத்த புரத மருந்துகள் இடைக்கால தீர்வாக இருக்கும் என மருத்துவ நிபுணர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

author img

By

Published : Mar 22, 2020, 12:01 AM IST

கரோனா வைரஸ் தொற்று பரவல் வெளியாகி கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் கடந்துவிட்டது. உலகில் இதுவரை இரண்டு லட்சத்து 76 ஆயிரம் பேர் வைரஸ் தொற்றுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர்.

176 நாடுகளில் 11 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். இது மிக தீவிர வைரஸ் தாக்குதலாக மருத்துவ துறையினர் கருதுகின்றனர். இந்த வைரஸ் தொற்றுக்கு நோய் கண்டறியும் முயற்சியில் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் ப்ளூம்பெர்க் ஸ்கூல் ஆஃப் பப்ளிக் ஹெல்த் நிறுவனத்தில் பணிபுரியும் அமெரிக்காவைச் சேர்ந்த, தொற்று நோய் மருந்து கண்டறியும் நிபுணர்களான ஆர்ட்டுரோ காசாடெவால் மற்றும் ஜில் சோமர் ஆகியோர் ஈடுபட்டுள்ளனர்.

இந்த ஆராய்ச்சியாளர்கள் பல முன்மாதிரிகளை கொண்டு ஆராய்ச்சி நடத்திவருகின்றனர். அப்போது, கரோனா நோய்த் தொற்றில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் மருத்துவ சுகாதார பணியாளர்களுக்கு ரத்த புரதத்திலிருந்து எடுக்கப்பட்ட சீரம் நோய் எதிர்ப்பு சக்தி மருந்துகளை (ஆன்டிபாடிக்) வழங்குவது இடைக்கால தீர்வாக அமையும் என்று கண்டறிந்துள்ளனர்.

அவர்களைப் பொறுத்தவரை, கரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு அல்லது முக்கியமான சுகாதாரப் பணியாளர்களுக்கு சிகிச்சையளிக்க கோவிட்-19 தாக்குதலிருந்து மீண்ட நபர்களின் ஆன்டிபாடிக் (சீரம்) மருந்தை பயன்படுத்த வேண்டும்.

அதன்படி நோயாளிகளிடமிருந்து பெறப்பட்ட சீரம் (இரத்தம் உறைதலில் இருந்து எடுக்கப்படும் உயர் சக்திவாய்ந்த புரத திரவம்) பயனுள்ளதாக இருக்கும். இது குறித்து ஆராய்ச்சியாளர்கள் பல்வேறு சாத்தியமான சிகிச்சைகள் மற்றும் தடுப்பூசிகளை விரைவுபடுத்துகிறார்கள்.

இருப்பினும் அடுத்த பல மாதங்களில் எதுவும் கிடைக்க வாய்ப்பில்லை. ஏனெனில் 2020ஆம் ஆண்டுக்குள் அல்லது அதற்கு மேற்பட்ட காலத்திற்கு ஒரு தடுப்பூசி கிடைக்க வாய்ப்புகள் மிக குறைவு. ஏனெனில் சீரம் தனிமைப்படுத்துவதற்கான செயல்முறை நீண்டகாலமாக நிறுவப்பட்ட தொழில்நுட்பமாகும்.

இது பொதுவாக மருத்துவமனைகள் மற்றும் இரத்த வங்கி வசதிகளில் காணப்படும் கருவிகளைப் பயன்படுத்தி செய்ய முடியும். ஆக இனிவரும் காலங்களில கோவிட்-19 பாதிப்பிலிருந்து மீண்டு வரும் நோயாளிகளிடம் நோய் எதிர்ப்பு சக்தி அடங்கிய சீரம் தானம் செய்யுமாறு கேட்கப்படலாம். பின்னர் அவை வைரஸ் தாக்குதலுக்கானவர்களுக்கு சோதிக்கப்படும்.

சார்ஸ் உள்ளிட்ட நோயாளிகளுக்கும் பரிசீலிக்கப்படும். ஏனெனில் சீனாவில் மருத்துவர்கள் முதலில் இதனை பயன்படுத்தி உள்ளனர். நோய்த் தொற்று தாக்குதலின் முதல் கட்டத்தில் பயன்படுத்தப்பட்ட சீரம், அதன்பின்னர் பயன்படுத்தப்படவில்லை.

மேலும் பாதிக்கப்பட்ட ஒரு நோயாளிக்கு சிகிச்சையளிக்க நோய் எதிர்ப்பு சக்தி நிரப்பப்பட்ட சீரம் வழங்க, கரோனா வைரஸிலிருந்து மீண்ட எத்தனை நோயாளிகள் தேவைப்படுவார்கள் என்பது இதுவரை தெளிவாகத் தெரியவில்லை.

“சீரம் நோய் எதிர்ப்பு சக்தியை கொண்டு எத்தனை நோயாளிக்கு உதவ முடியும் என்பது அதனை நாம் எவ்வாறு பயன்படுத்துகிறோம் என்பதில்தான் இருக்கிறது என்று ஆராய்ச்சி நிபுணர் காசடேவால் கூறினார். மேலும் இதற்கு சில பாதுகாப்பான பயன்பாடும் அவசியம் என்று அவர் கூறினார்.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றுக்கு ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர். நாடு முழுக்க 298 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று அறிகுறி காணப்படுகிறது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.