குடியுரிமை சட்டத்திருத்த மசோதா கடந்த 9ஆம் தேதி மக்களவையிலும் 11ஆம் தேதி மாநிலங்களவையிலும் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேறியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வடகிழக்கு மாநிலங்களில் கடும் போராட்டம் நடைபெற்றுவருகிறது.
இந்நிலையில், நேற்று கவுகாத்தியில் போராட்டக்காரர்கள் சாலைகளில் இறங்கி போராட்டம் நடத்தினர். அப்போது வன்முறை வெடித்ததையடுத்து போராட்டகாரர்களை நோக்கி காவல் துறையினர் தூப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் மூன்று பேர் உயிரிழந்தனர். மேலும், 12 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் கவுகாத்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க...பேரறிவாளனின் பரோல் மேலும் ஒரு மாத காலம் நீட்டிப்பு!