குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்றுவருகிறது. இதில், வடகிழக்கு டெல்லியில் நடைபெற்ற போராட்டத்தில் இருவேறு பரிவினருக்கிடையே மோதல் ஏற்பட்டது. இது வன்முறையில் முடிவடைந்ததால், அங்கு தொடர்ந்து பதற்றம் நிலவிவருகிறது.
இதனிடையே, அவர்கள் கற்கள் வீசி தாக்கிக் கொண்டதால் அதை கட்டுப்படுத்தும் விதமாக கண்ணீர் புகை வீசி கூட்டத்தைக் கலைக்க டெல்லி காவல்துறையினர் முயற்சித்தனர். பெண்கள் உட்பட நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்கள் அங்கு குவிந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதனால், வடகிழக்கு டெல்லியில் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், மவுஜாபூர் - பாபர்பூர் இடையேயான மெட்ரோ சேவை முடங்கியுள்ளது.
இதையும் படிங்க: 4 கால்களோடு பிறந்த அபூர்வ கோழிக்குஞ்சு