ETV Bharat / bharat

பாதிரியார் பிஷப் பிராங்கோ மீது மேலும் ஒரு பாலியல் புகார்! - கேரள பாதிரியார் பிஷப் பிராங்கோ

திருவனந்தபுரம்: பாலியல் விவகாரத்தில் குற்றம்சாட்டப்பட்டுள்ள கேரள பாதிரியார் பிஷப் பிராங்கோ மீது மேலும் ஒரு கன்னியாஸ்திரி பாலியல் புகார் அளித்துள்ளார்.

Bishop franco
Bishop franco
author img

By

Published : Feb 22, 2020, 10:13 AM IST

கேரள மாநிலத்தைச் சேர்ந்த பாதிரியார் பிஷப் பிராங்கோ முலாக்கல் மீது பல்வேறு கன்னியாஸ்திரிகள் பாலியல் புகார் அளித்து வழக்குத் தொடுத்துள்ளனர். இவ்வழக்கில் காவல்துறையினர் பாதிரியாரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். பின்னர், பிணையில் விடுதலையான இவர், வழக்கில் இருந்து தன்னை விடுவிக்குமாறு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

இந்நிலையில், பிராங்கோ மீது மேலும் ஒரு கன்னியாஸ்திரி பாலியல் புகார் அளித்துள்ளது தெரியவந்துள்ளது. இந்த வழக்கின் 14வது சாட்சியமான 35 வயது மதிக்கத்தக்க கன்னியாஸ்திரி, பாதிரியார் மீது இந்தப் புகாரைத் தெரிவித்துள்ளார். கடந்த 2015 முதல் 2017ஆம் ஆண்டு காலக்கட்டத்தில் பிஷப் பிராங்கோ தன்னை வாஸ்ட்ஆப், வீடியோ அழைப்பில் மூலம் தொடர்ச்சியாக தொடர்பு கொண்டதாக, அந்தக் கன்னியாஸ்திரி தெரிவித்துள்ளார்.

பின்னர், தன்னிடம் அத்துமீறத் தொடங்கிய பிராங்கோ, வீடியோ அழைப்பில் தனது உடல் பாகம் குறித்து ஆபாசமான கருத்துக்களைப் பேசியதாக வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார். திடீரென ஒரு நாள் நள்ளிரவில் அவரது அறைக்கு தன்னை அழைத்து, பலவந்தமாக கட்டியணைத்து முத்தமிட்டதாகவும் அந்தப் புகாரில் தெரிவித்துள்ளார்.

பிராங்கோவின் இந்த அருவருக்கத்தக்க செயல்கள் தன்னை மிகுந்த மனஉளைச்சலுக்குத் தள்ளியதாக தெரிவித்த கன்னியாஸ்திரி, அதன்பின்னர் பிராங்கோவிடமிருந்து விலத் தொடங்கியதாக் கூறியுள்ளார். சேவ் அவர் சிஸ்டர்ஸ் என்ற அமைப்பு பிஷப் பிராங்கோ மீது பல்வேறு பாலியல் புகார்களை கடந்தாண்டு அளித்து வழக்குத் தொடுத்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: வாணியம்பாடியில் நகைக்கடைகளில் வருமான வரி சோதனை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.