உத்தரப் பிரதேச மாநிலம் மிர்சாபூரில் உள்ள நடுநிலைப் பள்ளியில் 32 மாணவர்கள் பயின்றுவருகின்றனர். இந்தப் பள்ளியில் வழங்கப்படும் மதிய உணவுத் திட்டத்தில் ஊழல் நடப்பதாக புகார்கள் எழுந்தன.
அதாவது, மாணவர்களுக்கு வெறும் ஒரு கிலோ அரசி மற்றும் 400 கிராம் பால் மட்டுமே வழங்கியுள்ளனர். அதுவும் மதிய உணவுத் திட்டம் என்ற பெயரில் ரொட்டியும், தொட்டுக் கொள்ள உப்பும் வழங்கப்பட்டுள்ளது.
இது குறித்து அலுவலர்கள் விசாரணை நடத்திவருகின்றனர். கடந்த வாரம் மிர்சாபூரில் மதிய உணவு அண்டாக்குள் தவறி விழுந்து மூன்று வயது சிறுமி ஒருவர் உயிரிழந்தார்.
இந்நிலையில் மற்றொருப் பள்ளியில் வழங்கப்பட்ட மதிய உணவுத் திட்டத்தில் ஊழல் நடந்திருப்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: காசாளர் இல்லாத மளிகைக்கடை: புதிய வரையறைகளுடன் களமிறங்கியது அமேசான்!