ETV Bharat / bharat

சினிமா தயாரிப்பாளர் குடும்பத்தினரால் துன்புறுத்தப்பட்ட 'தலித்' இளைஞர்! - ஆந்திர மாநில செய்திகள்

விசாகப்பட்டினம்: ஆந்திராவைச் சேர்ந்த சினிமா தயாரிப்பாளர்கள் குடும்பத்தினர், 20 வயதுடைய தலித் இளைஞரை மொட்டை அடித்து துன்புறுத்தப்பட்ட சம்பவம் மாநிலம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

another-dalit-attack-in-andhara-pradesh
another-dalit-attack-in-andhara-pradesh
author img

By

Published : Aug 29, 2020, 6:33 PM IST

ஆந்திரப் பிரதேச மாநிலம் பலசா மாவட்டத்தில் பாட்டி மற்றும் சகோதரியுடன் வசித்து வந்தவர் பர்ரி ஸ்ரீகாந்த். இவர் வேலைக்காக விசாகப்பட்டினத்திற்கு குடிபெயர்ந்துள்ளார். அந்த நிலையில், கடந்த நான்கு மாதங்களாக சினிமா தயாரிப்பாளர் நூதன் நாயுடு வீட்டில் வேலை செய்திருக்கிறார்.

ஆகஸ்ட் 1ஆம் தேதிக்கு பின், அந்த வேலையை விட்டுள்ளார். இந்த நிலையில் நூதன் நாயுடுவின் மனைவி, தனது வீட்டில் உள்ள செல்போன் தொலைந்து போனது தொடர்பாக பேசுவதற்காக ஸ்ரீகாந்தை நேற்று முன்தினம் (ஆகஸ்ட் 27) வீட்டிற்கு அழைத்தனர்.

அப்போது, ஸ்ரீகாந்த் தான் செல்போன் திருடியதாகக் குற்றஞ்சாட்டி அவரை குடும்பத்தினர் இரும்பு கம்பியை வைத்து தாக்கினர். பின்னர் அவருக்கு மொட்டை அடித்து துன்புறுத்தினர். மேலும், இது பற்றி வெளியில் கூறினால் கடும் விளைவுகளை சந்திக்க வேண்டி வரும் என மிரட்டினர்.

சினிமா தயாரிப்பாளர் குடும்பத்தினரால் துன்புறுத்தப்பட்ட 'தலித்' இளைஞர்

இந்த நிலையில், இது குறித்து பெண்டுருத்தி காவல் நிலையத்தில் ஸ்ரீகாந்த் புகாரளித்தார். இது தொடர்பாக இணை ஆணையர் சுரேஷ் பாபு பேசுகையில், ''தலித் இளைஞர் ஒருவரிடமிருந்து புகார் வந்தது. இதனால் எஸ்சி/எஸ்டி சட்டப்படி வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறோம். பெண்டுருத்தி காவல் நிலைய ஆய்வாளர் விடுப்பில் உள்ளதால், துணை ஆணையர் வழக்கினை விசாரணை மேற்கொண்டு வருகிறார்'' என்றார்.

பர்ரி ஸ்ரீகாந்த்

இது தொடர்பாக விசாகப்பட்டினம் காவல் ஆணையர் மனீஷ் குமார் சிசிடிவி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், குற்றஞ்சாட்டப்பட்ட சினிமா தயாரிப்பாளர் குடும்பத்தினர், ஸ்ரீகாந்தை தாக்கும் காட்சிகள் தெளிவாக தெரிகிறது. இந்த சம்பவம் ஆந்திர மாநில மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: அலைகழித்த மாவட்ட நிர்வாகம்... சொந்த பணத்தில் சாலை அமைத்த ஆந்திரா பழங்குடியின மக்கள்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.