ETV Bharat / bharat

'அங்கித் சர்மாவை கொலைசெய்தவர் விரைவில் கைதுசெய்யப்படுவார்' - அமித்ஷா - மக்களவையில் அமித்ஷா பேச்சு

டெல்லி: டெல்லி வன்முறையில் உளவுத் துறை அலுவலர் அங்கித் சர்மாவை கொடூரமாகக் கொலைசெய்தவர் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என அமித் ஷா மக்களவையில் உறுதிபட தெரிவித்தார்.

'அங்கித் சர்மாவை கொலை செய்த நபர் விரைவில் கைது செய்யப்படுவார்'  - அமித்ஷா

author img

By

Published : Mar 12, 2020, 12:01 PM IST

டெல்லியில் கடந்த 24ஆம் தேதி சி.ஏ.ஏ.வுக்கு எதிராகவும் ஆதரவாகவும் நடைபெற்ற போராட்டம் வன்முறையாக வெடித்தது. இரண்டு நாள்களுக்கும் மேலாக நீடித்த வன்முறையில் காவல் துறையினர் உள்ளிட்ட 42 பேர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவத்தில் மத்திய உளவுத் துறை அலுவலர் அங்கித் சர்மா கொடூரமான முறையில் கொலைசெய்யப்பட்டார்.

நூற்றுக்கும் மேற்பட்ட கத்திக்குத்துகளுடன் அவரது உடல் கழிவுநீர் தொட்டியிலிருந்து மீட்கப்பட்டது. அங்கித் சர்மாவின் கொடூரக் கொலையில் ஆம் ஆத்மி கட்சியிலிருந்து நீக்கப்பட்ட கவுன்சிலர் தாஹீர் ஹுசைனுக்குத் தொடர்புள்ளது எனச் சந்தேகிக்கப்பட்டு, டெல்லி காவல் துறை அவர் மீது வழக்குப்பதிவு செய்தது.

இந்நிலையில் நேற்று மக்களவையில் டெல்லி வன்முறை குறித்த விவாதம் நடைபெற்றது. இதில் பேசிய மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா, "டெல்லி வன்முறை திட்டமிட்ட சதியாகும். இதற்குக் காரணமானவர்கள் அனைவரும் தண்டிக்கப்படுவார்கள்" என்று தெரிவித்தார்.

மேலும் பேசிய அவர், "மத்திய உளவுத் துறை அலுவலர் அங்கித் சர்மா கொலைசெய்யப்பட்ட காணொலியை புலனாய்வுப் பிரிவினர் பொதுமக்களிடமிருந்து பெற்றுள்ளனர். விரைவில் கொலைசெய்த நபரைக் கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

இதையும் படிங்க;

தாஹிர் ஹூசேன் மீது அமலாக்கத் துறை வழக்குப்பதிவு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.