ஆந்திர மாநிலம் குண்டூர் அருகே லக்ஷ்மிபுரம் கமலேஷ் கிராண்ட் அபார்ட்மெண்ட் என்ற ஐந்து மாடி குடியிருப்பில், நர்ரா மனோஜ்னா (29) வசித்து வந்தார். இவர் நேற்றிரவு 8 மணி அளவில், தனது கட்டடத்தின் மேலியிருந்து தனது ஒன்பது மாத குழந்தையை கீழே வீசி எறிந்துள்ளார். பின்னர் தானும் மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
இதில், குழந்தை உயிரிழந்தது. மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த மனோஜ்னா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
தனது மகள் இறப்பில் சந்தேகம் இருப்பதாக காவல் துறையினரிடம் மனோஜ்னாவின் தாயார் கூறியதையடுத்து, முதல் தகவல் அறிக்கை பதிவு செய்த காவல் துறையினர் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.