கரோனா தீநுண்மி பரவல் காரணமாக வழிபாட்டுத் தலங்கள் நாடு முழுவதும் மூடப்பட்டன. அதைத்தொடர்ந்து ஊரடங்கு தளர்வுகளின் அடிப்படையில் மத்திய அரசு வழிபாட்டுத் தலங்களைப் பாதுகாப்புடன் திறக்க அனுமதியளித்தது.
அதன்படி ஆந்திர மாநிலம் சித்தூரில் அமைந்துள்ள பிரசித்திப்பெற்ற ஸ்ரீகாளஹஸ்தி கோயில் நிர்வாகம் கோயிலைத் திறக்க முடிவுசெய்தது. அதனால் பாதுகாப்பு நடவடிக்கையாக கோயில் பணியாளர்கள், நிர்வாகத்தினர், அர்ச்சகர்களுக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அந்தப் பரிசோதனையில் அர்ச்சகர் ஒருவருக்கு கரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இது குறித்து கோயில் நிர்வாகி சந்திரசேகர் ரெட்டி கூறுகையில், "மத்திய அரசின் அனுமதியின்படி ஸ்ரீகாளஹஸ்தி கோயிலைத் திறக்கும் நோக்குடன், பாதுகாப்பு நடவடிக்கையாக கோயிலின் பணியாளர்கள், நிர்வாகத்தினர், அர்ச்சகர்கள் உள்பட 71 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
அதன் முடிவுகளில் அர்ச்சகர் ஒருவருக்கு கரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. எனவே நாங்கள் தற்காலிகமாக கோயிலைத் திறப்பதற்கான நடவடிக்கைகளை ஒத்திவைக்கிறோம்.
இதையும் படிங்க: முதியவர்கள் - சிறுவர்கள் கோயிலுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும்!