ETV Bharat / bharat

இனி ஆந்திராவிலும் ஆங்கில வழிக் கல்வி!

author img

By

Published : Nov 6, 2019, 10:39 AM IST

Updated : Nov 6, 2019, 11:36 AM IST

அமராவதி: அடுத்த கல்வியாண்டு முதல் ஆந்திராவில் உள்ள அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வி கற்பிக்கப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

Andhra pradesh set to introduce english medium in govt schools

இது குறித்து ஆந்திரா அரசின் கல்வித் துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், ’ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள அனைத்து அரசு, ஜில்லா பரிஷத் உள்ளிட்ட பள்ளிகளில் இனி ஆங்கில வழியில் பாடம் கற்பிக்கப்படும். இதில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை வரும் கல்வியாண்டான 2020-21ஆம் ஆண்டிலிருந்து, ஒன்பது, பத்தாம் வகுப்புகளுக்கு 2021-22ஆம் கல்வியாண்டு முதல் தொடங்கப்படும்.

மேலும், தெலுங்கு, உருது மொழிகளையும் கட்டாய பாடமாக்கவும், ஆங்கில வழியில் பாடத்தை நடத்த ஆசிரியர்களுக்கு போதுமான பயிற்சி வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது’ என குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் 2015 ஆம் ஆண்டு முதல் ஆங்கில வழிக் கல்வி முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க...'செல்பி எடு, காசு கொடு' - கோவா கிராம மக்கள்

Last Updated : Nov 6, 2019, 11:36 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.