ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி தலைமையிலான ஆட்சி நடைபெற்றுவருகிறது.
அங்கு மாநிலத் தேர்தல் ஆணையராக ரமேஷ் குமார் என்பவர் பதவி வகித்துவந்த நிலையில் அவருக்கும் முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டிக்கும் மோதல் போக்கு நிலவியது.
தலைமைத் தேர்தல் ஆணையர் ரமேஷ் முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவின் காலத்தில் நியமிக்கப்பட்டவர் என்ற நிலையில், மார்ச் மாதம் நடைபெறவிருந்த உள்ளாட்சித் தேர்தல் விவகாரத்தில் இந்த மோதல் முற்றியது. கரோனா பாதிப்பு தொடக்க காலத்தில் உள்ளாட்சித் தேர்தலை நடத்தியே தீர வேண்டும் என்று ஜெகன் ஒற்றைக் காலில் நிற்க இதில் முரண்பட்ட ரமேஷ் குமார் பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.
இது தொடர்பாக அம்மாநில எதிர்க்கட்சியான சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. இந்த வழக்கு விசாரணையில் இன்று உயர் நீதிமன்றம், தேர்தல் ஆணையர் ரமேஷ் குமாரின் பதவிநீக்கம் தவறான நடவடிக்கை எனவும் மீண்டும் அவரை மாநிலத் தேர்தல் ஆணையராக நியமிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.
இதையும் படிங்க: ராமர் கோயில் விவகாரத்தில் பாகிஸ்தானின் புகார் அர்த்தமற்றது: இந்தியா பதில்