ஆந்திராவின் பெண் துணை முதலமைச்சரான ஸ்ரீவானி தோன்றும் டிக்-டாக் காணொலிக் காட்சிகள் மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அம்மாநிலத்தின் முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டியின் அமைச்சரவையில் துணை முதலமைச்சராக இருப்பவர் ஸ்ரீவானி.
இவர் விஜயநகரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர். அண்மையில் ஜெகன் நிர்வாக ரீதியாக மாநிலத்துக்கு மூன்று தலைநகர்களை உருவாக்கப்போவதாக அறிவித்தார். ஜெகனின் முடிவுக்கு ஆதரவு தெரிவித்து ஸ்ரீவானி டிக்-டாக்கில் காணொலிக் காட்சி ஒன்றை பதிவிட்டுள்ளார்.
அந்தக் காணொலிக் காட்சியில் ஜெகன்மோகன் ரெட்டியின் தேர்தல் பரப்புரை (அண்ணா என்றழைக்கும் பாடல்) இடம்பெற்றுள்ளது. இந்தக் காணொலிக் காட்சிகள் தற்போது வைரலாகிவருகின்றன.
இதையும் படிங்க: இத்தனைபேர் துணையிருக்க எனக்கென்ன மனக்கவலை...? - வைரமுத்து