ETV Bharat / bharat

தொட்ட... கெட்ட...! - பெண்கள் பாதுகாப்பில் அசத்தும் ஆந்திரா! - மகளிர் தினம்

அமராவதி: ஆந்திர மாநிலத்தில் பெண்களுக்குப் பாதுகாப்பான சூழலை உறுதிசெய்வதற்காக, மேலும் 12 திஷா காவல் நிலையங்கள் தொடங்கப்படவுள்ளன.

Andhra Pradesh 12 more Disha police stations will be started on March 8  Andhra Pradesh  Disha police stations  Andhra Pradesh Director General of Police (DGP) Gautam Sawang  பெண்கள் பாதுகாப்பில் அசத்தும் ஆந்திரா  ஆந்திரா திஷா காவல் நிலையங்கள்  மகளிர் தினம்  மார்ச்8
Andhra Pradesh 12 more Disha police stations will be started on March 8
author img

By

Published : Mar 7, 2020, 2:24 PM IST

ஆந்திர காவல் துறை தலைவர் கௌதம் சவாங், இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, “பெண்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில் மாநிலத்தில் கூடுதலாக 12 திஷா காவல் நிலையங்கள் நாளை (மார்ச்8) தொடங்கப்படும்.

அதாவது 12 மகளிர் காவல் நிலையங்கள் திஷா காவல் நிலையமாக மாற்றப்படும். தற்போதுவரை மாநிலத்தில் ஆறு திஷா காவல் நிலையங்கள் உள்ளன. விசாகப்பட்டினம், திருப்பதியில் தடயவியல் ஆய்வகங்கள் அமைக்கப்படும். பெண்களின் பாதுகாப்புக்கு ஆந்திர மாநிலத்தை முன்மாதிரியாக மாற்ற இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதுவரை 51 திஷா வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல்செய்யப்பட்டுள்ளன. திஷா காவல் கட்டுப்பாட்டு மையத்துக்கு இதுவரை 14 ஆயிரம் அழைப்புகள் வந்துள்ளன. இதில் அதிகமான புகார்கள் அவர்களின் கணவர் செய்யும் துன்புறுத்தல் குறித்தது.

ஆந்திராவின் காவலன் செயலியை இதுவரை இரண்டு லட்சத்துக்கும் அதிகமானோர் பதிவிறக்கம் செய்துள்ளனர்” என்றார்.

தெலங்கானாவில் கடந்தாண்டு கால்நடை பெண் மருத்துவர் நால்வரால் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்டார். இதையடுத்து ஆந்திராவில் திஷா சட்டம் கொண்டுவரப்பட்டது.

இந்தச் சட்டம் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோர் மீது விரைந்து குற்றப்பத்திரிகை தாக்கல்செய்ய வழிகோலுகிறது.

இதையும் படிங்க: 'நீதியை தாமதமாக்கும் சட்டத்தின் ஓட்டை' - நிர்பயா வழக்கில் சிவசேனா புலம்பல்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.