கரோனா வைரஸ் தொற்று பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவம் மூன்றாவது முறையாக ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்களின் அன்றாட வாழ்வு பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இருந்தபோதிலும் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நலத்திட்டங்களை அறிமுகப்படுத்திவருகின்றன.
அந்தவகையில் அத்தியாவசிய தொழிலான விவசாயத்தை கண்காணிக்கும் விதமாக ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி, புதிய செயலி ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளார்.
இந்தச் செயலி மூலம் விவசாயிகள், தாங்கள் விளைவிக்கும் விளை பொருள்களுக்கான செலவு, கொள்முதல், சந்தைப்படுத்தல் குறித்தான விவரங்களை தெரிந்து கொள்ளலாம். இதன் மூலம் விவசாயிகள் நலன்பெற முடியும்.
மேலும், உள்ளூர் அளவில் விவசாய நிலைமைகளை கண்காணிக்கவும், விவசாய பொருள்களுக்கான விற்பனை, கொள்முதலை கண்காணிக்கவும் அலுவலர்களுக்கு முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிங்க...தெலங்கானாவில், மதுபானங்களின் விலை 16 விழுக்காடு அதிகரிப்பு