ஆந்திரப் பிரதேச மாநிலம் கர்னூல் மாவட்டம் அல்லகடா நகரில் பாஸ்கர்-லதா தம்பதி் வசித்துவருகின்றனர். இவர்கள் ஆசையாக வெள்ளை பொம்மேரியன் வகை நாய் ஒன்றை கடந்த 17 ஆண்டுகளாக வளர்த்துவந்துள்ளனர். இத்தம்பதியினருக்கு குழந்தை இல்லாததால் இந்த நாய்க்கு டாமி எனப் பெயரிட்டு தங்கள் வீட்டுச் செல்லப்பிள்ளைபோல் வளர்த்துவந்தனர்.
இந்நிலையில் கடந்த சில வாரங்களாக அந்த நாய்க்கு உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்தது. கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று டாமியின் உடல்நிலை மிகவும் மோசமானதால் பரிதாபமாக உயிரிழந்தது. இது அத்தம்பதியை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியது.
அதைத் தொடர்ந்து பாஸ்கர்-லதா தம்பதி, இறந்த நாய் உடலுக்கு மாலை அணிவித்து பின் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்ததன்பேரில் அவர்கள் வந்து நாயைபார்த்துவிட்டு மரியாதை செலுத்தி தம்பதிக்கு ஆறுதல் கூறிச் சென்றனர். பின்னர் இடுகாட்டில் அந்த நாயின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இதையும் படிங்க: 'வெறி நாய்க்கடி நோய் இல்லாத மாநகரம்' - சென்னை மாநகராட்சியின் தடுப்பு நடவடிக்கைகள்