ETV Bharat / bharat

உத்தரகாண்ட் கோயிலின் பழமையான படிக்கட்டுகள் கண்டுபிடிப்பு! - உத்தரகாண்ட் கோயிலின் பழமையான படிக்கட்டுகள் கண்டெடுப்பு

டேராடூன் : உத்தரகாண்டில் உள்ள ஒரு கோயிலில் நூற்றாண்டு பழமை வாய்ந்த படிக்கட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

ancient-stairs
ancient-stairs
author img

By

Published : Nov 5, 2020, 3:35 AM IST

வரும் 2020ஆம் ஆண்டு நடைபெறவுள்ள கும்பமேளாவை முன்னிட்டு உத்தரகாண்டில் உள்ள ஹரி கி பவுரி கோயிலில் புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்றுவருகின்றன. இந்நிலையில், இப்பணிகளின் மத்தியில் அக்கோயிலில் நூற்றாண்டு பழமை வாய்ந்த படிக்கட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

கும்பமேளாவை முன்னிட்டு ஹரித்வாரில் பல ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. ஆனால், கரோனா ஊரடங்கால் இப்பணிகள் தொய்வடைந்தன. இந்நிலையில், புதுப்பிக்கும் பணிகளின்போது கண்டெடுக்கப்பட்ட பழமை வாய்ந்த படிக்கட்டுகள் தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது.

அந்தப் படிக்கட்டுகளில் பழமையான மொழிகளின் வார்த்தைகள் பொறிக்கப்பட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து, ஸ்ரீ கங்கை சபை அலுவலர்கள் கோயிலுக்குச் சென்று புதுப்பிக்கும் பணிகளை நிறுத்தினர். பழைமையான படிக்கட்டுகள் கண்டெடுக்கப்பட்டது குறித்து இந்தியத் தொல்லியல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இந்தப் படிக்கட்டுகள் 100 முதல் 150 ஆண்டுகள் பழமையானதாக இருக்க வாய்ப்புள்ளதாக வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.