வரும் மார்ச் 8ஆம் தேதி பெண்கள் தினம் கொண்டாடப்படுகிறது. இதனால் பெண்கள் முன்னேற்றம் குறித்து அனைவரும் பேசிவருகினறனர். பிரதமர் மோடியும், பெண்கள் தினத்தன்று தனது சமூக வலைதளத்தை பெண்கள் நிர்வகிக்கலாம் என்று அறிவித்துள்ளார்.
இந்நிலையில், தென்னக ரயில்வேயின் எக்ஸ்பிரஸ் ரயிலை முதன்முறையான பெண்கள் இயக்கியுள்ளனர். பெங்களூர் - மைசூர் இடையே செல்லும் ராஜ்ய ராணி எக்ஸ்பிரஸ் ரயிலை பெண் ஊழியர்கள் மட்டும் இயக்கினர். பெண்கள் தினத்தன்றும் இவர்கள் இந்த ரயிலை இயக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ‘பெண்கள் தினத்தன்று எனது ட்விட்டர் கணக்கு பெண்களுக்குதான்’ - மோ
டி